மெழுகுவர்த்தியை போன்றதுதான் உங்கள் ஆட்சி

ராணுவவீரர் பிரபு கொலையை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் ஒருஈகோசிஸ்டம் உள்ளது. ஜே.என்.யூ ஈகோ சிஸ்டம், ஜந்தர் மந்தர் ஈகோ சிஸ்டம். எங்கேயாவது அரியானாவில் ஒருநாய் செத்துப் போயிருக்கும். பிஜேபி ஆட்சியில் இருக்கும். உடனே கனிமொழி மெழுகு வர்த்தியுடன் வருவார்கள். உத்தர பிரதேசத்தில் ஒருகுரங்கிற்கு வயிறு சரி இல்லாமல் போயிருக்கும். அந்த குரங்கிற்கு வயிறு சரியில்லாமல் போனதற்கு யோகி ஆதித்ய நாத் தான் காரணம் என்று மெழுகுவர்த்தியை தூக்கிக்கொண்டு குறுக்கவும் மறுக்கவும் ஓடுவார்கள். இன்றைக்கு அந்தகும்பல் எங்கே சென்றது.

மெழுகுவர்த்தியை யார் கையில் எடுத்தாலும் அது மொத்தமாக எரிந்து கீழே வந்து விடும். அதே போலத்தான் உங்க (திமுக) ஆட்சி. மெழுகுவர்த்தி போல உங்க ஆட்சி எரிந்துகொண்டு இருக்கிறது. அது உங்களை உணர்த்துவதற்காகத் தான். மெழுகுவர்த்தி எப்படி எரிந்து உருக்குலைந்து போகிறதோ அதே போல்தான் உங்கள் ஆட்சியும். உங்கள் ஆணவம் இப்போது தலைவிரித்து ஆடினாலும் கூட அதற்கும் நேரமும் காலமும் இருக்கத்தான் செய்கிறது.

2024-ல் முழுமையாக எரிகிறதா? 2026-ல் முழுமையாக எரிகிறதா என்பதை காலமும் அரசும் ஜனாதிபதியும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் இப்படி இரண்டு மாதத்திற்கு ஒருபிரச்சினை சென்று கொண்டிருந்தால் எப்படி அரசை நடத்து வீர்கள். இந்திய அளவில் பேசப் படுகிற ஒரு பிரச்சினை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தமிழகத்தில் இருந்துதான் உருவாகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆடுபட்டிபோல மனிதர்கள் பட்டி உள்ளது. ஒரு பூத்திற்கு 100 பேரை அடைத்து வைத்துள்ளனர்.

முதல்வருக்கு வெட்கமாக இல்லையா? 238 பூத்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளது. 238 பட்டிகள் போடப்பட்டுள்ளது. அந்த பட்டிகளுக்குள் நம்மை போன்றமனிதர்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் யாரும் அவர்களை பார்த்து பிரசாரம் செய்யக் கூடாது என ஒரு நாளைக்கு ஆயிரம் கொடுத்து இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள். பஞ்சம் தலைவிரித் தாடும் நாடுகளில்கூட இப்படி மனிதப்பட்டிகள் கிடையாது. கேட்டால் திராவிடமாடல் என்கிறார்கள். வெட்கமாக இல்லையா? இப்படி எலக்‌ஷெனை ஜெயிக்கனுமா? முதல்வருக்கு வெட்கமாக இல்லையா? இப்படி ஜெயித்து என்னசெய்ய போகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.