கிராமப் புறங்களில் தொழில்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. டிராக்டர் விற்பனை, விவசாய உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கொரோனாதொற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளை தணிக்க கடந்த மே மாதம், ரூ.20 லட்சம்கோடி ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது: ஊக்குவிப்பு திட்டங்கள் முடிந்துவிட வில்லை. தேவைப்பட்டால் தொடரும். அவசரகால கடன் உத்தரவாதம் திட்டத்தின் பலன்கள் எம்.எஸ்.எம்.ஈ.,க்களுக்கு மட்டுமின்று தனிப்பட்ட உரிமையாளர்கள், கூட்டு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. வங்கிகளுக்கு அதிக பணப்புழக்கம் வழங்கப்பட்டது.
பொருளாதார நடவடிக்கைகளை கொரோனா மோசமாக பாதித்துள்ளது. குறிப்பாக ஜிடிபி.,யில் 55% பங்குகொண்ட சேவைத்துறை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. உற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிக்கு திரும்புகின்றனர்.
வேறு எந்தநாட்டிலும் இல்லாத வகையில் நேரடியாக மக்கள் வங்கிகணக்கு பணம் செலுத்தும் வசதி இந்தியாவில் உள்ளது. இதனால் தேவைப்படும் நபருக்கு பணம் சென்றடைந்ததா என்பது குறித்து அரசு கவலைப்பட தேவையில்லாமல் போனது. விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.2,000 சென்றடைந்துள்ளது. கிராமப் புறங்களில் தொழில்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அந்த பகுதிகளில், டிராக்டர் விற்பனை, விவசாய உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |