நவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி

நவராத்திரி எட்டாவது நாளில் நாம் வழிபட வேண்டிய தேவி நரசிம்ஹி. தன் பக்தன் பிரகலாதனுக்காக இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்வதற்காக பகவான் நரசிம்ஹ அவதாரம் எடுத்தபோது நரசிம்ஹரின் சக்தியாகத் திகழ்ந்தவள் நரசிம்ஹி. நரசிம்ஹி மனித உடலும், சிங்க முகமும் கொண்டு, சங்குசக்கரம் ஏந்தி காட்சி தருபவள். இவளை வழிபடும் பக்தர்களுக்கு எதிரிகளால் இன்னல்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பவள். இவளையே நாம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபடவேண்டும். இன்றைய தினம் நாம் வழிபட வேண்டிய குமாரி – துர்கா தேவி; மந்திரம் – ஓம் துர்காயை நம:, சுவாசிநியின் பெயர் – மஹா கௌரி; மந்திரம் – ஓம் மஹா கௌர்யை நம:, மலர் – விபூதி பச்சை; நைவேத்தியம் – பால் பாயசம்.

இன்றைய தினம் ஒன்பதுவயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை துர்கையாக பாவித்து பூஜை செய்து, அவர்களுக்கு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலபொருள்களை வழங்கி மகிழ்விக்கவேண்டும். இப்படிச் செய்வதால், அம்பிகை மனம்மகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை அருள்புரிவாள்.

நவராத்திரி விழாவில் நாம் வழிபடும் தேவியர் அனைவரும் அன்னை ஆதி சக்தியின் அம்சங்களே ஆவர். இவர்களை பல்வேறு பெயர்களில் வழிபட்டாலும், அசுரர்களை அழிப்பதற்காகத் தோன்றிய நவ துர்கை சக்திகள்தான். நவ துர்கா தேவியரை நவராத்திரி நாள்களில் வேறு வேறு திருநாமங்களில் வழிபடும் நாம், நவதுர்கையர் தோன்றிய புராண வரலாற்றையும் இங்கே பார்ப்போம்.

சைலபுத்ரி, பிரம்ஹசாரிணி, சந்த்ரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயணி, காலராத்ரி, மஹா கௌரி, ஸித்திதாத்ரி ஆகியோரே நவதுர்கைகள்.

சிவபெருமானின் தாண்டவங்களில் இருந்து பிறந்தவர்களே நவதுர்கைகள். ஒவ்வொரு தாண்டவத்தில் இருந்தும் ஒரு துர்கை அவதரித்தார்கள்.

நடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் அவதரித்தவள்தான் சைலபுத்ரி. ரிஷிமண்டல கோளத்தில் இருந்து சிவபெருமான் ஆடும் ஆனந்த தாண்டவத்தில் இருந்துதான் எழுத்துகள் தோன்றின. நவராத்திரி முதல்நாள் வழிபடும் சைலபுத்ரியை வழிபட, திருமணத் தடைநீங்கி, மங்களகரமான வாழ்க்கை அமையும்.

அடுத்து இரண்டாவது நாளில் ஆடப்பட்ட நடனம் திரிபுர தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இத்தாண்டவத்தில் சிவ பெருமான் தனது இடதுக்காலின் கட்டை விரலால் ஒருகோலத்தினை வரைகிறார். அக்கோலத்துக்கு அஷ்டவசுக்கோலம் என்று பெயர். இந்தத் தாண்டவத்தில் அவதரித்தவள் பிரம்ஹசாரிணி. இவளை வழிபடுவதால் மனதில் உறுதி பிறந்து, எதையும் சாதிக்கும் துணிவு கிட்டும்.

மூன்றாவது நாள் ஆடப்பட்ட நடனத்தின் பெயர் ஊர்த்துவ தாண்டவம் ஆகும். இந்த நடனத்தில் வரையப்பட்ட பிரணவ ஒலிக் கோலத்தில் இருந்து தோன்றியவளே சந்த்ரகண்டா. சிவபெருமான் தனக்குப் போட்டியாக ஆடிய காளிதேவியை வெற்றி கொள்ள, தனது வலது காலை தரையில் ஊனறி, இடதுக் காலை தோளுக்கு இணையாக தூக்கி ஆடிய நடனம் ஆகும். சந்த்ரகண்டா எனப்படும் இந்ததேவியை வழிபடுவதால், மனதில் உள்ள தீய எண்ணங்கள் அழிந்து, மனதிற்கு அமைதி கிடைக்கும்.

நான்காம் நாளில் வழிபடப்படும் கூஷ்மாண்டா தேவி ஸப்த ஒலிக்கோலத்திலிருந்து அவதரித்தவள் ஆவாள். இந்த கோலமானது சிவபெருமானால் இடது கால் விரல் கொண்டு வரையப்பட்டது ஆகும். இத்தாண்டவம் பகலும், மாலையும் இணையும் வேளையில் ஆடப்படுவதால் ‘ஸந்தியா தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது. கூஷ்மாண்டா தேவி நமக்கு அனைத்து வகையான செல்வங்களையும் அளிப்பவள். இவளை வழிபடுவதால் வறுமைத் துயரம் நீங்கும்.

புஜங்க தாண்டவத்தில் இருந்து வெளிப்பட்டவளே ஸ்கந்த மாதா ஆவாள். பாற்கடலில் இருந்து வெளியேறிய நஞ்சினை உண்டு ஆடிய ஆட்டம் ஆகும். இதில் வரையப்பட்ட கோலம் புஜங்கத் தாண்டவக் கோலம் ஆகும். இவளை வழிபடுவதால் புத்திர பாக்கியம் ஏற்பட்டு, நம் வம்சம் விருத்தியாகும்.

சிவனடியார்களில் ஒருவரும், மாபெரும் முனிவருமான பதஞ்சலி முனிவர் ஒருசமயம் மிருதங்கம் வாசித்தார். தன் வாசிப்பிற்கு சிவபெருமான் ஆடவேண்டும் என்று ஈசனிடம் பணிந்து நின்றார். தன் பக்தரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமானும் தாண்டவம் ஆடினார். அப்போது அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தேவியே காத்யாயணி ஆவாள். முனிவரின் இசைக்கேற்ப ஆடியதால் இது முனிதாண்டவம் என்று அழைக்கப்பட்டது. காத்யாயணி தேவியை நாம் வழிபட்டால் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

ஏழாம் நாளில் நாம் வழிபடும் தேவிகாலராத்ரி ஆவாள். பூத உடல் கொண்ட அரக்கனை அழித்து அந்தச் சினம் தீர ஆடிய ஆட்டமே பூததாண்டவம் ஆகும். இந்த தாண்டவத்தில் வரையப்பட்ட கோலமே பூத தாண்டவ கோலம் என அழைக்கப்படுகிறது. இதிலிருந்து வெளிப்பட்ட தேவிகாலராத்ரி ஆவாள். இவளை வழிபடுவதால் நம்மைச் சுற்றி இருக்கும் தீயவர்களும் பகைவர்களும் அழிவர்.

தண்டகாரண்யத்தில் வேள்விசெய்த முனிவர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அரக்கர்களை ஒழிக்கவேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அரக்கர்களை அழித்த சிவபெருமான், பிறகு ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். இந்த சுத்த தாண்டவ கோலத்திலிருந்து வெளிப்பட்ட தேவி மஹா கௌரி. இந்த தேவியை வழிபடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சிவபெருமான் தன்முகத்தில் நவரசங்களையும் காட்டி நடனம் ஆடினார். அவர் வரைந்த நவரசக்கோலத்தில் இருந்து வெளிப்பட்டவளே சித்திதாத்திரி தேவி இவளை வணங்குவதால் அனைத்து யோகங்களும் நமக்கு கிடைக்கும்.

இவ்வாறு இந்த ஒன்பது தினங்களில் நவதுர்கைகளை வணங்குவதால் சகலவிதமான நன்மைகளைப் பெறுவதோடு, நம்மை சுற்றியிருக்கும் அனைத்து தீமைகளும் அன்னையின் அருளால் நீங்கிவிடும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...