சரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}

சரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.} ஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர்.

சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் சுபாகு. இதனைக்கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை பராசக்தியே நேரில்தோன்றி வதம்செய்தார்.

பிறகு பராசக்தி அன்னை சுதர்சனனிடம், அயோத்திசென்று, அங்கு நீதியுடன் அரசாளவும், தினமும் நாள்தவறாமல் தனக்கு பூஜைசெய்யும் படியும் கட்டளை இட்டாள். வசந்தகாலத்தில் வரும் நவராத்திரி விழாவின்போதும், அஷ்டமி, நவமி, சதுர்த்தி தினங்களில் தனக்கு சிறப்புபூஜைகள் செய்யும்படியும் அன்னை கேட்டுக்கொண்டாள்.

அவ்வாறே அன்னையின் ஆணைப்படி, ஆகமமுறைப்படி அனைத்து விதமான பூஜைகளையும் அன்னைக்குசெய்து வழிபட்டார் சுதர்சனன். அம்பிகையின் பெருமைகளை ஊர் ஊராகச்சென்று பரவச்செய்தனர்.

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் முறையே மூன்றுநாட்களுக்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என வழிபடுவது நன்மையை அளிக்கும். ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் நவராத்திரி வழிபாடுசெய்துதான் தங்களது கஷ்டங்களில் இருந்து விடுபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

இத்தகைய மகிமையை கொண்டது நவராத்திரிவிழா. கலை மகளான சரஸ்வதியை வழிபடும் தினமான சரஸ்வதி பூஜை யன்று மாலை கொண்டாடப்படும் விழாவே ஆயுதபூஜை.

செய்யும்தொழிலே தெய்வம் என்ற புனித தத்துவத்தை உணர்த்தும் விழாவே இந்த ஆயுதபூஜை. நம் நாட்டில் மதவேறுபாடின்றி எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாம்செய்யும் தொழிலுக்கு உதவக்கூடிய ஆயுதங்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் சரஸ்வதிக்கென உள்ள ஒரேகோயில் தான் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலயம், இந்த ஆலயம் மயிலாடு முறையில் இருந்து திருவாரூர்செல்லும் வழியில் பூந்தோட்டம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கூத்தனூர் கிராமம்.

இந்த கோயிலின் ராஜகோபுரம் தனியாக இல்லை. சரஸ்வதிதேவி குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்களுடன் ஒருகோபுரம் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் சரஸ்வதிதேவி வெண்தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார்.

வலதுகரத்தில் சின்முத்திரையுடனும், இடதுகரத்தில் புத்தகத்துடனும், வலதுமேல் கையில் அட்சர மாலையுடனும், இடதுமேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சிதருகிறார் சரஸ்வதி தேவி. கையில் வீணையுடன் கிழக்கு திசையில் காட்சிதருகிறார்.

இந்தகோயிலில் துர்க்கையும், மகா லட்சுமியும், பெருமாளும் வீற்றிருக்கின்றனர். ஆனாலும் சரஸ்வதிக்கேன்றே உள்ள தனிக்கோயிலாகவே இந்தகோயில் விளங்குகிறது.
கோயில் பிரஹாரத்தில் பிரம்மா, ஒட்டக் கூத்தர், நர்த்தன விநாயகர் சிலைகள் உள்ளன. அன்னைக்கு எதிரே பலிபீடத்தின் முன்னே அன்னையின் வாகனமான அன்னம் அன்னையை பார்த்தவண்ணம் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் திருத்தலவரலாறு யாதுயெனில், குலோத்துங்க சோழமன்னனின் அவைப்புலவராக இருந்தவர் ஒட்டக் கூத்தர். இராமாயண காவியத்தில் ஏழாவது காண்டமாகிய உத்திரகாண்டத்தையும், குலோத்துங்கசோழனை தலைவனாக கொண்டு பாடப்பட்ட தக்கயாக பரணி என்ற நூலையும் படைத்த பெரும்புலவர் ஓட்டக் கூத்தர். இவரது கவிபாடும் ஆற்றலை கண்ட குலோத்துங்க சோழன், ஒருஊரையே பரிசாகக் கொடுத்தார்.

அப்படி பரிசாகவழங்கப்பட்ட ஊர்தான் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது. இந்த கூத்தனூரில் குடிகொண்டுள்ள அன்னை சரஸ்வதிதேவியின் அதீத அன்பை பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர். ஒட்டாக் கூத்தர் பரணிநூல் பாட சரஸ்வதிதேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

உயிர்களை படைக்கும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதிதேவி. பிரம்ம லோகத்துக்கே தான்னால்தான் பெருமை என்று சரஸ்வதி, பிரம்மா என இருவருக்குள்ளும் சர்ச்சை ஏற்பட்டது. இதன்காரணமாக பூலோகத்தில், சோழநாட்டில் புண்ணிய கீர்த்தி, சோமனை என்ற தம்பதிக்கு மகனாக பிரம்மாபிறந்தார். பகுகாந்தன் என்ற பெயர் சூட்டப்பெற்றார்.

சிரத்தை என்ற பெயருடன் சாஸ்வதிதேவி பிறந்தார். இருவருக்கும் திருமண ஏற்பாட்டை புண்ணிய கீர்த்தி செய்யும் வேளையில், சிரத்தைக்கும், பகுகாந்தனுக்கும் முன்ஜென்ம நினைவுவந்தது இருவரும் சிவனை வழிபட்டனர்.

சிவனின் அருள்பெற்ற சரஸ்வதி, கங்கையுடன் இணைந்தாள். கங்கா தேவியின் ஒரு அம்சமாக மாறினாள். சரஸ்வதிதேவியும், பிரம்மனும் ஒன்றுசேர்ந்தனர். கூத்தனூர் ஆபத்சகாயேஸ்வரர், பரிமளநாயகியின் அபிஷேக நீராக மாறினாள் சரஸ்வதி. கூத்தனூரில் மஹாசரஸ்வதி அம்மனாக குடிகொண்டாள்.

இந்த திருக்கோயில் கூத்தனூர் ஹரிச்சொல் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் வசந்த நவ ராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவ ராத்திரியும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விஜய தசமியன்று புருஷோத்தம பாரதிக்கு அன்னையின் அருள்கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பிள்ளைகளை அன்றைய தினம் பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது. அன்றையதினம் இக்கோயிலில் மழலைகளுக்கு முதன் முதலாக கல்விபோதிக்கும் நிகழ்ச்சியும் வெகுசிறப்பாக நடைபெறுகிறது.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...