பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளோடு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணைஅமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் 2020 டிசம்பர் 1 அன்று உரையாடினார்.
வேளாண் சீர்திருத்த சட்டங்களின் பலன்கள்குறித்து விவசாய சங்கங்களுக்கு அமைச்சர்கள் மீண்டும் விளக்கினார்கள். வேளாண் சீர்திருத்த சட்டங்கள் குறித்த பல்வேறு விஷயங்கள்குறித்து சுமூகமான சூழ்நிலையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை அன்புடன்வரவேற்ற வேளாண் அமைச்சர், விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளதென்றும், பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயாராக உள்ளதென்றும் தெரிவித்தார்.
வேளாண்துறையின் வளர்ச்சி எப்போதுமே இந்திய அரசின் முக்கிய முன்னுரிமையாக இருந்திருக்கிறது என்று அமைச்சர் கூறினார். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நிபுணர் குழுவொன்றை அமைக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்காக அரசோடு இன்னொரு கட்டபேச்சுவார்த்தையில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |