கொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னணி

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காலத்திலும்  பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும், உதவிதேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா உதவி அளித்திருப்பது குறித்து குடியரசு துணைத் தலைவர்  வெங்கய்ய நாயுடு இன்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

சென்னையில் நடந்த உலக விவகாரங்களுக்கான இந்தியகவுன்சிலின் (ICWA) 19வது நிர்வாகக்குழு கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றினார். அதன் தலைவர் என்ற வகையில் தொடக்க உரையாற்றியவர், பெருந்தொற்றை சமாளிக்க உலக அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது . “தடுப்புமருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம், சீக்கிரம் நல்லசெய்தி கிடைக்கும்”.

இந்தியாவின் சாமானியமக்களின் வாழ்க்கையில் சர்வதேச உறவுகள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது, இந்த பெருந்தொற்று காலத்தில் பலமாக தெரிய வந்திருக்கிறது

வெளிநாடுகளில் வாழ்ந்த மற்றும் வேலைபார்த்து வந்த இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான வந்தேபாரத் திட்டம் பற்றி  நாயுடு குறிப்பிட்டார். அந்தப் பெரும் பணிகளை திறமையாகக் கையாண்ட துறையினர் மற்றும் ஏஜென்சிகளுக்கு அவர் பாராட்டுதெரிவித்தார்.

இதுபோன்ற மக்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளை ஐ.சி.டபிள்யூ.ஏ. அமைப்பு அதிகமாக மேற்கொண்டு, இது வரையில் சேவைகள் கிடைக்காத மக்களை சென்றடைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஏறத்தாழ எந்த நாடுமே கோவிட்-19 பாதிப்பில் தப்பவில்லை என்று கூறியவர், சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை வெவ்வேறுவகைகளில் அது பாதித்துள்ளது என்று குறிப்பிட்டார். நாடுகளில் உள்ள மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான விஷயங்களை வெளிக்கொண்டு வருவதாக இந்தப் பெருந்தொற்று காலம் அமைந்துவிட்டது என்றார் அவர். “பெரும்பாலானவர்கள் கூட்டு ஒத்துழைப்பு எண்ணத்தை வெளிப்படுத்திய நிலையில், சிலர் குறுகிய மனப் பான்மை காரணமாக பின்வாங்கி விட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்று காரணமாக பிராந்திய மற்றும் உலகளவில் ஏற்பட்டதாக்கம் குறித்த, சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்த ஆய்வில் இந்தக்கவுன்சில் கவனம் செலுத்துவதாக கூறியவர், “கடந்த எட்டுமாதங்களில் ஏற்பட்ட, நினைவில் கொள்ள வேண்டிய இந்த மாற்றங்கள் கவுன்சிலின் ஆராய்ச்சி பணிக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது” என்று கூறினார்.

பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் வசதிகளை இந்தஅமைப்பு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, 50 ஆன்லைன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேசளவிலான கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தியது, வெளிநாட்டு அமைப்புகளுடன் கலந்தாடல் கூட்டங்கள் நடத்தியது, பிராந்திய மற்றும் உலகளவிலான கூட்டங்களில் பங்கேற்றது, இந்தியாவுக்கும் உலக அளவிலான பங்களிப்பாளர்களுக்கும் இடையில் மெய்நிகர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியவற்றை குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள வெளிநாட்டு விவகாரங்களுக்கான முக்கியமான சிந்தனை மன்றங்களில் ஒன்றாக தன்னுடைய இடத்தை ஐ.சி.டபிள்யூ.ஏ. பலப்படுத்திக் கொள்ள இது உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஆப்பிரிக்கா குறித்த தேசிய ஆலோசனைகளின்போது தாம் கூறிய பரிந்துரைகளின்படி, ஆப்பிரிக்க நாடுகளைச்சேர்ந்த கொள்கை உருவாக்குநர்கள் மற்றும் அறிஞர்களுடன் காணொலி மூலம் 2 நாள் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்தது குறித்து அவர் திருப்திதெரிவித்தார்.

தனது செயல்பாடுகள் மூலம் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ஐ.சி.டபிள்யூ.ஏ.-வுக்கு பாராட்டு தெரிவித்தவர், கவுன்சிலுக்கு வழிகாட்டுதல்கள் அளித்தமைக்காக வெளியுறவு அமைச்சகத்துக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...