மோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும்

மோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும் என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது கட்டமாக இன்று பிற்பகலில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இரவு வரை, டெல்லி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று நாங்கள் விவசாயிகளுக்கு உறுதியாக கூறியுள்ளோம், அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதைசந்தேகிப்பது ஆதாரமற்றது. இன்னும்கூட, சந்தேகப்பட்டால், அதைத் தீர்க்க அரசு தயாராக உள்ளது.

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும், அரசுபரிசீலிக்கும் என்று நாங்கள் விவசாயிகளிடம் கூறியுள்ளோம். விவசாயிகளின் தலைவர்களிடமிருந்து இந்தபிரச்சினைக்கு பரிந்துரைகள் கிடைத்தால் தீர்வுகாண்பது எங்களுக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் பரிந்துரைகள் தரவில்லை.

கோவிட் மற்றும் குளிரான வானிலையை கருத்தில்கொண்டு, வயதானவர்களையும் குழந்தைகளையும், போராட்ட களத்திலிருந்து, வீட்டிற்கு திருப்பிஅனுப்புமாறு விவசாய தொழிற்சங்கங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பிரதமர் மோடியின் தலைமையில், பலவிவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையைகூட அதிகரித்துள்ளோம்.

மோடி அரசு என்ன செய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும். போராட்டத்தில் கட்டுக்கோப்பை பேணியதற்காக விவசாயிகள் சங்கங்களுக்கு நான் நன்றிகூற விரும்புகிறேன். இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 9ம் தேதிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...