விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற துணைநிற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
பல்லடம் அருகேயுள்ள கோடங்கி பாளையத்தில் உழவா் உழைப்பாளா் கட்சித் தலைமை அலுவலகமான உழவாலயத்தில் அக்கட்சியின் மாநிலத்தலைவா் செல்லமுத்துவை, பாஜக மாநில தலைவா் அண்ணாமலை திங்கள்கிழமை சந்தித்துபேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது: உழவாலய கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சியினா் விரும்புகின்றனா். விவசாயிகளின் விருப்பத்தை பிரதமா் மோடியின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன்.
அதேபோல, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற துணை நிற்பேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், ஆனைமலையாறு – நல்லாறுதிட்டம் செயல்படுத்த வேண்டும். மின் மோட்டாருக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு கட்டுபடியாகும் விலை நிா்ணயத்தல், விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு, விளைபொருள்களை பாதுகாக்க கிடங்குகள், பருத்தி ஏற்றுமதி, சின்னவெங்காய ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலையிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |