ஈழத்தமிழர்கள் மீதான திமுக.,வின் பரிதாபம் பித்தலாட்டம்

திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஈழத்தமிழர்கள் சுயமரியாதையோடு வாழவும் இலங்கையில் தமிழ் மாகாணங்களை ஒழிப்பதைக் குறித்தும் திடீரென அறிக்கைவிட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாமே வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான பித்தலாட்ட கணக்குதான். வேறெதற்கு இந்த திடீர் கரிசனம்.

நடந்து முடிந்த 2009 முள்ளிவாய்க்கால் போரின் போது திமுக, மத்திய மன்மோகன்சிங் காங்கிரஸ் அரசில் இடம்பெற்றது. அப்போது தமிழர்களை இலங்கையில் அழித்ததெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் இருந்தார்கள். நான் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. எங்களைப் போன்றவர்கள் எல்லாம் இலங்கையில் நடந்த துயரத்தைக் கலைஞரிடம் எடுத்துச் சொன்னதெல்லாம் உண்டு. அப்போது டெல்லியில் பெரியப் பொறுப்பிலிருந்த டி.ஆர்.பாலு கண்டுகொள்ளவேயில்லை. 2010-க்கு பிறகு தமிழகத்தில் திமுக மீது எதிர்வினைகள் பலத்தரப்பில் வர என்ன செய்வதென்று கலைஞர் நினைத்தார். இந்த குற்றச்சாட்டிலிருந்து விடுபடவேண்டுமென்று டெசோ என்ற அமைப்பைத் திரும்பவும் கலைஞர் கூட்டினார். அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த கே.எஸ்.இராதாகிருஷ்ணனை அழைத்து திமுகவில் சேர்த்து டெசோ பணிகளைக் கவனிக்கச் சொன்னார். அவரும் டெசோவுக்காக கடுமையாக உழைத்தார். அவர் இப்போது திமுகவில் எங்கிருக்கிறார் என்று தெரியாமலே போய்விட்டார்.

டி.ஆர்.பாலுவின் ஈழத்தமிழர் அக்கறை. ஒவ்வொருவருக்கும் தெரியும் எப்படி ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள், எப்படி திமுக கண்டுகொள்ளாமல் இருந்தது அதேபோல் முள்ளிவாய்க்கால் நடந்து முடிந்த பிறகும் இவர்கள் திருந்தவில்லை. இதே டி.ஆர்.பாலு கொழும்பிற்குச் சென்று தமிழர்களின் இரத்தத்தைக் குடித்த ராஜபக்சேவிடம் கைகுலுக்கினார்கள், விருந்து உண்டார்கள், பரிசு பெற்றார்கள். அதெல்லாம் மானங்கெட்டத் தனமில்லையா?

அதே டிஆர் பாலு அறிக்கை விட்டுள்ளார் என்றால் வேடிக்கையாக உள்ளது. என்ன நேர்மை இவர்களிடம் உள்ளது. முள்ளிவாய்க்காலில் உயரிழந்தவர்களின் குடும்பத்தினரும், பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களும் இவர்களைப்பற்றி போங்கடா போக்கத்த பசங்களா’ என்று நினைக்கமாட்டார்களா? என்பதைபற்றி கவலைப்படாமல் இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்று முள்ளிவாய்க்கால் தமிழர் இனபடுகொலை நடந்தபோது மத்திய அமைச்சரவையில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள் வெட்கமில்லாமல் யோக்கியர் போல் அறிக்கை விடுவதை சகிக்கமுடியவல்லை.

‘கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு!’ என்ற கதைதான் டி.ஆர்.பாலுவின் அறிக்கை, இதெல்லாம் போலித்தனங்கள் போலி முகங்கள் என திமுகவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் பலர் ராஜபக்சேவுடன் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். இலங்கை அரசில் தனக்கான வியாபாரங்களைப் பெருக்கிக்கொள்பவர்கள் திமுக தலைவர்கள் ஆவர். . அப்படிப்பட்டவர்கள் அறிக்கையில் என்ன நேர்மை இருக்க போகிறது.

இலங்க அரசு தற்போது அறிவித்துள்ள மகாணங்கள் ஒழிக்கப்படும் என்ற அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை மகிழ்ச்சியோடு இதுவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. வரவேற்கவும் இல்லை. பின் எதற்காக டிஆர்பாலு அவர்கள் மத்திய அரசை குற்றம்சாட்டுகிறார். ‘

‘தான் திருடி-பிறரை நம்பார்’ என்பதுபோல திமுக தேர்தலுக்காக நீலிக்கண்ணீர் வடித்தாலும் முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நடந்தபோது 2ஜி வழக்கிற்காக மன்மோகன்சிங் அரசிடம் திமுக மண்டியிட்டு கிடந்ததையும் ,இராஜிவ்படுகொலைக்கு பழிதீர்த்துக்கொள்ள ஒட்டுமொத்த ஈழதமிழ் இனத்தையும் அழிக்க உதவிய காங்கிரஸ் அரசில் பலம் பொருந்திய கூட்டணி தலைவராக டிஆர்பாலு அப்பொது இருந்தார்.

அப்பொழுது தமிழர்களுக்காக வடியாத கண்ணீர் இப்பொழுது நீலிக்கண்ணீராக வடிகிறது அதை தமிழக வாக்காளர்கள் நம்புவார்கள் என்று நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். எந்த பிரச்சனையிலும் திமுக உண்மையாக இருக்கவேண்டும். திமுகவின் மூத்த தலைவர்களாவது ஐபேக் கம்பனி அறிவுரையின் படி அறிக்கை விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.இது மிகவும் வெட்கக்கேடானது.

டாக்டர். கே பி இராமலிங்கம் Ex MP .

பாஜக – தமிழ்நாடு

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...