2020-21ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை

2020-21ம் ஆண்டுக்கான  பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவாகரத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். கொவிட் முன்கள பணியாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

நூறாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய இக்கட்டின் போது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை காப்பாற்றுதல்

•        கொவிட்-19 தொற்று தொடக்கத்தின் போது, மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதில் இந்தியா கவனம் செலுத்தியது. நீண்ட கால ஆதாயத்துக்காக, குறுகிய கால சிக்கலை இந்தியா விரும்பி ஏற்றுக்கொண்டது.

•        மனித இழப்புகளை திரும்ப பெறமுடியாது.

•        கொவிட் பெருந்தொற்று ஏற்படுத்திய தற்காலிக அதிர்ச்சியிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி மீளும்.

•        கொவிட் முடக்கத்தை முன்கூட்டியே அமல்படுத்தியது, மக்கள் உயிரை காப்பாற்றுவதில் வெற்றிகரமான உத்தியாக இருந்தது. நடுத்தரம் முதல் நீண்ட கால பொருளாதார மீட்பு நடவடிக்கை மூலம் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டன.

•        நிச்சயமற்ற சூழ்நிலை நிலவியபோது, உயிரிழப்பை குறைப்பதில், அரசின் கொள்கை கவனம் செலுத்தியது.

•        இந்தியாவின் உத்தி, கொவிட் பாதிப்பை 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குறைத்தது.

•        செப்டம்பர் மாத கொரோனா பாதிப்பு உச்சத்துக்குப்பின், தினசரி பாதிப்பு தொடர்ந்து குறையத் தொடங்கியது.

•        இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதமாக குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, முதலாவது காலாண்டில்  23.9 சதவீதமாக உயர்ந்தது. இது ஆங்கில எழுத்து ‘வி’ வடிவிலான மீட்சி.

•        கொவிட் பெருந்தொற்று தேவை மற்றும் விநியோகம் ஆகிய இரண்டையும் பாதித்தது.

•        நடுத்தர மற்றும் நீண்டகால  விநியோகத்தை விரிவுபடுத்தவும்,  உற்பத்தி துறையில் நீண்ட கால பாதிப்பை குறைக்கவும், கட்டமைப்பு சீர்திருத்திருத்தங்களை அறிவித்த ஒரே நாடு இந்தியா.

•        தேவையை அதிகரித்து,  பொருளாதார மீட்பை அதிகரிக்க தேசிய கட்டமைப்பு திட்டத்தில், பொது முதலீடு திட்டம் மையமாக இருந்தது.

•        பொருளாதார மீட்பு  மற்றும் கொவிட் இரண்டாம் அலை பாதிப்பை தவிர்க்கும் உத்திகளுடன் கொள்கை திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

2020-21ல் பொருளாதார நிலை: ஒரு பார்வை

•        கொவிட்-19 பெருந்தொற்று, உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. உலகளாவிய நிதி நெருக்கடியில் இது மிக மோசமானது.

•        ஏற்கனவே மந்தமாக இருந்த உலகளாவிய பொருளாதாரத்தை, முடக்கம் மற்றும் சமூக இடைவெளி நெறிமுறைகள் ஸ்தம்பிக்கச் செய்தன.

•        சர்வதேச நிதியத்தின் 2021ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, 2020ம் ஆண்டில் உலக பொருளாதார வீழ்ச்சியின் அளவு 3.5 சதவீதம்.

•        பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில், உலகம் முழுவதும் அரசுகள் மற்றும் மத்திய வங்கிகள், கொள்கை திட்டங்களை உருவாக்கின, நடைமுறைகளை எளிதாக்கின.

•        கட்டுப்படுத்துதல், நிதியாண்டு சார்ந்த, நிதி மற்றும் நீண்ட கால கட்டமைப்பு சீர்திருத்தங்கள் என்ற நான்கு தூண்கள் உத்தியை இந்தியா மேற்கொண்டது.

•        முடக்க காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிதியுதவிகள் அளிக்கப்பட்டன. முடக்க நீக்கத்தின்போது, நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவை ஊக்குவிக்கப்பட்டன.

•        சாதகமான நிதி கொள்கை, பணப் புழக்கத்தை அதிகரிக்கவும், கடன் பெற்றவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதையும் உறுதி செய்தது.

•        தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -7.7 சதவீதமாக வளர்ச்சியடையும். 21ம் நிதியாண்டின் முதலாவது காலாண்டை விட, இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 23.9 சதவீதமாக இருக்கும்.

•        இந்தியாவின் இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2021-22ம் நிதியாண்டில் 11.0 சதவீதமாக இருக்கும். பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 15.4 சதவீதமாக வளர்ச்சியடையும். சுதந்திரம் பெற்றதிலிருந்து இது மிக அதிகளவிலான வளர்ச்சி:

•        கொவிட்-19 தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

•        முதலீடு மற்றும் தனியார் நுகர்வு குறைந்த நிலையில், அரசின் நுகர்வு மற்றும் ஏற்றுமதி, பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைவதை தடுத்து வளர்ச்சிக்கு உதவியது.

•        2020-21ம் நிதியாண்டின் 2வது காலாண்டில், அரசின் நுகர்வு காரணமாக பொருளாதார வளர்ச்சி 17 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

•        21ம் நிதியாண்டில் ஏற்றுமதி 5.8 சதவீதம் குறையும் எனவும்,  இறக்குமதி 11.3 சதவீதம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

•        21ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு கணக்கில் 2 சதவீதம் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

•        கொவிட்-19 தொற்று ஏற்படுத்திய பாதிப்பை, வேளாண்துறையின் அதிக உற்பத்தி சரிசெய்யவுள்ளதால், 21ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக இருக்கும்.

•        21ம் நிதியாண்டில், தொழில்துறை மற்றும் சேவைகள் துறை வளர்ச்சி முறையே 9.6 சதவீதம் மற்றும் 8.8 சதவீதம் குறையும் என மதிப்பிடப்படுகிறது.

•        வேளாண்துறை மட்டும் வளர்ச்சி கண்டது. சேவைகள், உற்பத்தி, கட்டுமான துறைகள் கடுமையாக பாதிப்படைந்தன. தற்போது நிலையாக மீண்டு வருகின்றன.

•        2020-21ம் நிதியாண்டில், இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இருந்தது. அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்தது.

•        அன்னிய நேரடி முதலீடு 2020ம் ஆண்டு நவம்பரில் மிக அதிக அளவாக 9.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

•        2020ம் ஆண்டில் அன்னிய நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்த ஒரே நாடு இந்தியா.

•        உணவு பணவீக்கத்தை பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய விநியோக கட்டுப்பாடுகளை எளிதாக்கியதன் மூலமாக நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் தளர்வடைந்துள்ளது.

•        21ம் நிதியாண்டின் 2வது காலாண்டின் முதலீட்டில் 0.8 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது காலாண்டில் முதலீட்டில் 29 சதவீதம் வீழ்ச்சி என மதிப்பிடப்பட்டிருந்தது.

•        தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கை தொடங்கியதால், மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயானதுமான சரக்கு போக்குவரத்து அதிகரித்தது.  ஜிஎஸ்டி வருவாய் சாதனை அளவை எட்டியது.

•        இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்த  உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீத அளவுக்கு நடப்பு கணக்கு கூடுதலாக இருந்ததற்கு வெளிப்புற துறை காரணமாக இருந்தன.

•        வலுவான சேவைகள் ஏற்றுமதி மற்றும் தேவை குறைவு ஆகியவை இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் அதிக வீழ்ச்சியை ஏற்படுத்தின. வர்த்தக இறக்குமதி  39.7 சதவீதம் குறைந்தது. வர்த்தக ஏற்றுமதியும் 21.2 சதவீதம் குறைந்தது.

•        அன்னிய செலாவணி கையிருப்பு 2020 டிசம்பரில், 18 மாதங்கள் இறக்குமதிக்கு நிகராக அதிகரித்தது.

•        2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும் போது, 20.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டு கடன், செப்டம்பர் இறுதியில் 21.6 சதவீதமாக அதிகரித்தது.

•        மொத்த மற்றும் குறுகிய கால கடனுக்கான அன்னிய செலாவணி கையிருப்பு விகிதம் அதிகரித்தது.

•        மின் நுகர்வு , இ-வே ரசீதுகள், ஜிஎஸ்டி வருவாய், எஃகு நுகர்வு அதிகரித்து வருவதால், வி வடிவ பொருளாதார மீட்பு ஏற்பட்டு வருகிறது.

•        6 நாட்களில் 10 லட்சம் கொவிட் தடுப்பூசிகளை விநியோகித்த வேகமான நாடாகவும், அருகில் உள்ள நாடுகள் மற்றும் பிரேசிலுக்கு தடுப்பூசிகளை விநியோகித்த முன்னணி நாடாகவும் இந்தியா மாறியது.

•        மிகப் பெரிய தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதால், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

•        சேவைகள் துறை, நுகர்வு மற்றும் முதலீடு துறைகளில் நம்பிக்கை மீண்டும் தூண்டப்பட்டுள்ளது.

•        தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை அகற்றி, நல்ல வளர்ச்சியை ஏற்படுத்த சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

•        நாற்றாண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடிக்கு, இந்தியா மேற்கொண்ட பக்குவமான கொள்கை, ஜனநாயகத்துக்கு முக்கிய பாடங்களை வழங்கி, நீண்ட கால ஆதாயத்தில் கவனம் செலுத்தும் பலன்களை நிருபிக்கிறது.

கடன் நிலைத்தன்மைக்கு வளர்ச்சி வழி வகுக்கிறதா? ஆம்.

•        கடன் நிலைத்தன்மைக்கு வளர்ச்சி வழி வகுக்கிறது:

கடன் நிலைத்தன்மை, வட்டிவீத வளர்ச்சி மாறுபாட்டை பொறுத்தது. உதாரணம்: வட்டி வீதம் மற்றும் வளர்ச்சி வீதத்துக்கு உள்ள வித்தியாசம்.

•        இந்தியாவில், கடனுக்கான வட்டி வீதம், வளர்ச்சி வீதத்தை விட குறைவாக உள்ளது.

•        இந்தியாவில் எதிர்மறையான வட்டிவீத வளர்ச்சி மாறுபாடு, குறைவான வட்டி வீதத்தின் காரணமாக அல்ல, அதிக வளர்ச்சி வீதம் காரணமானது.

•        வளர்ச்சி வீதம் அதிகமுள்ள நாடுகளில் கடன் நிலையானதாக உள்ளது. இது போன்ற நிலை, குறைந்த வளர்ச்சி வீதம் உள்ள நாடுகளில் காணப்படவில்லை.

•             பொருளாதாரம் வளர்ச்சி காலத்தை விட, பொருளாதார நெருக்கடி காலத்தில், பொருளாதார பெருக்கம் அதிகமாக உள்ளன.

சமத்துவமின்மையும் வளர்ச்சியும்: முரண்பாடா அல்லது ஒன்று சேருதலா?

•        சமத்துவமின்மை, சமூகப் பொருளாதார விளைவுகள் ஆகியவற்றுக்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார விளைவுகளுக்கும் இடையிலான தொடர்பு முன்னேறிய பொருளாதார நாடுகளைவிட இந்தியாவில் மாறுபட்ட வகையில் உள்ளது.

•        முன்னேறிய நாடுகளைப் போல அல்லாமல், இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் தனிநபர் வருமானம் (வளர்ச்சி) மற்றும் சமூகப் பொருளாதாரக் குறியீடுகளுக்கு இடையில் ஒரே மாதிரியான தொடர்பு இருக்கிறது.

•        பொருளாதார வளர்ச்சியானது சமத்துவமின்மை என்பதைவிட, வறுமை ஒழிப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

•        ஏழைகளை வறுமையில் இருந்து கைதூக்கி விடுவதற்கு, பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

•        வளரும் பொருளாதார நாட்டில், பொருளாதார அளவு அதிகாரித்தால் மட்டுமே, ஒட்டுமொத்த பகிர்மானத்தை விரிவுபடுத்த முடியும்.

சுகாதார அக்கறைக்கு முக்கியத்துவம்!

•        கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு சுகாதாரத் துறை மற்றும் பிற துறைகளுடன் அதன் தொடர்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. சுகாதார நெருக்கடி எந்த அளவுக்கு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை உருவாக்கும் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

•        பெருந்தொற்று சவால்களை சமாளிக்க தயார் நிலையில் இருக்கும் வகையில் இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டும். `உறுத்தலான பாகுபாடு’ என்ற வகையில் சுகாதாரக் கொள்கைகள் மாறிவிடக் கூடாது.

•        சமத்துவமின்மை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தேசிய சுகாதார லட்சியத் திட்டம் (என்.எச்.எம்.) முக்கிய பங்காற்றியுள்ளது. ஏழைப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முந்தைய / பிரசவத்துக்குப் பிந்தைய கவனிப்பு மற்றும் மருத்துவ மையங்களில் பிரசவம் பார்க்கும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.

•        ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் என்.எச்.எம். திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது தொடர வேண்டும்

•        சுகாதாரத்துக்கான செலவு ஜிடிபியில் 1 சதவீதத்தில் இருந்து 2.5-3 சதவீதம் வரை ஒதுக்குவதால், ஒட்டுமொத்த சுகாதாரம் சார்ந்த செயல்பாடுகளுக்கு கையில் இருந்து செலவழிக்கும் தொகை 65 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகக் குறையும்.

•        சரியான தகவல் கிடைக்காததால் ஏற்படும் தோல்விகளை சமாளிக்க, சுகாதாரத் துறையை ஒழுங்குபடுத்த ஓர் அமைப்பை உருவாக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும்

போதிய தகவல் கிடைக்காத பிரச்சினையை சரியாகக் கையாள்வதன் மூலம் காப்பீட்டு சந்தாவை குறைத்தல், நல்ல சேவைகள் கிடைக்க ஏற்பாடு செய்தல், அதிகமானோருக்கு காப்பீட்டு வசதி கிடைக்கச் செய்தல் ஆகியவை சாத்தியமாகும்.

சுகாதாரத் துறையில் தகவல் இடைவெளியை சரி செய்வதன் மூலம், ஒட்டுமொத்த சுகாதார நிலைமை மேம்பட உதவியாக இருக்கும்.

 

•        இன்டர்நெட் தொடர்பு வசதி, சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் முதலீடு செய்வதன் மூலம், டெலி மருத்துவ சேவையை செம்மையாக பயன்படுத்த வேண்டும்

சீர்திருத்தங்களின் செயல்பாடு

•        இந்தியாவில் பொருளாதார விவகாரங்கள் அளவுக்கு மிஞ்சி ஒழுங்குமுறை விதிகளுக்கு உள்ளாக்கப்படுவதால், ஓரளவுக்கு நல்ல ஒத்திசைவு காட்டுபவர்கள் கூட சிறந்த செயல்பாட்டை எட்ட முடியாமல் போகிறது

•        சாத்தியமான ஒவ்வொரு பின்விளைவையும் கணக்கில் கொண்டு, ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்படுவதே இதற்குக் காரணம்.

•        ஒழுங்குமுறை விதிகளில் சிக்கல்கள் அதிகரிப்பு, விருப்ப அடிப்படையிலான செயல்பாடுகளை குறைக்கும் நோக்கிலான முயற்சி ஆகியவற்றால் வெளிப்படையற்ற விருப்ப முடிவு எடுக்கும் நிலை அதிகரித்துவிடுகிறது.

•        ஒழுங்குமுறை விதிகளை எளிமையாக்கி, வரையறையின்படி அதிக விருப்ப உரிமையைக் குறிப்பிடுவதாக உள்ள தீவிர கண்காணிப்பில் முதலீடு செய்ய வேண்டும்.

•        இருந்தபோதிலும், வெளிப்படைத்தன்மை, முந்தைய பொறுப்பேற்பு மற்றும் பிந்தைய கால தீர்வைக்கான நடைமுறைகளுடன், விருப்ப உரிமை என்பது நடுநிலையானதாக இருக்க வேண்டும்

•        மேற்குறிப்பிட்ட அறிவார்ந்த கட்டமைப்பு, தொழிலாளர் விதிகள் முதல் பி.பி.ஓ. துறையில் சிரமம் தரும் விதிகளை நீக்குதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்திருக்கிறது.

ஒழுங்குவிதிகள் அமலை தள்ளிவைப்பது அவசர கால மருந்து மட்டுமே தவிர, நீடித்த நடைமுறை கிடையாது!

•        உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, ஒழுங்குவிதிகள் அமலை தள்ளி வைத்ததால், தற்காலிக சிரமங்களை கடனாளிகள் சமாளிக்க உதவியாக இருந்தது.

•        பொருளாதார மீட்சிக்குப் பிறகும் நீண்ட காலம் விதிகள் அமலாக்க தள்ளிவைப்பு தொடர்ந்ததால், பொருளாதாரத்தில் உத்தேசித்திராத விளைவுகள் ஏற்பட்டன.

•        வங்கிகள் தங்கள் கணக்குப் புத்தகங்களை சரி செய்வதற்கு இந்த விதிமுறையை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, கடனை தவறான முறையில் ஒதுக்கீடு செய்தன. அதனால் பொருளாதாரத்தில் முதலீட்டின் தரம் பாதிக்கப்பட்டது.

•        பொருளாதாரம் மீட்சி அடையத் தொடங்கியதும், கூடிய சீக்கிரத்தில் நிறுத்திவிட வேண்டிய அவசரகால மருந்து போன்றதாக, விதிமுறை அமல் தள்ளி வைப்பு நடவடிக்கை இருக்க வேண்டுமே தவிர, ஆண்டுகள் கணக்கில் நீடிக்கக் கூடிய நடைமுறையாக இருக்கக் கூடாது.

•        நிச்சயமற்ற சூழலில் முடிவெடுத்தலை ஊக்குவிக்க, பிந்தைய கால செயல்பாடுகளை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும், சாதகமற்ற விளைவுகளை தவறான கணிப்பு அல்லது உள்நோக்கத்துடனான முடிவு என்பதாகக் கருதக் கூடாது.

•        விதிகள் அமலாக்கம் தள்ளிவைப்பு திட்டம் திரும்பப் பெறப்பட்ட உடனேயே, சொத்து தர ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

•        இயல்பாகவே, கடன் வசூலுக்கான சட்டபூர்வ கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.

புதுமை சிந்தனை: முனைப்பு அதிகரிக்கிறது, இருந்தாலும் அழுத்தம் தேவைப்படுகிறது, குறிப்பாக தனியார் துறையில் முக்கியத்துவம் தேவைப்படுகிறது

•        2007-ல் உலக புதுமை சிந்தனை படைப்புக் குறியீடு தொடங்கப்பட்டதில் இருந்து 2020-ல் முதன்முறையாக, புதுமை சிந்தனை படைப்பு பட்டியலில் முதல் 50 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. மத்திய மற்றும் தெற்காசியாவில் முதலிடத்தையும், கீழ் நடுத்தர வருவாய் பொருளாதார நாடுகளில் மூன்றாவது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது

•        முதல் 10 இடங்களில் உள்ள பொருளாதார நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான (GERD) இந்தியாவின் மொத்த உள்நாட்டு செலவினம் மிக குறைந்தபட்ச அளவானதாக உள்ளது

•        முதல் 10 பொருளாதார நாடுகளுடன் புதுமை சிந்தனை படைப்பில் போட்டியிட வேண்டும் என்பது இந்தியாவின் உயர்விருப்ப நோக்கமாகும்.

•        முதல் 10 இடங்களில் உள்ள பொருளாதார நாடுகளின் GERD செலவின் சராசரியைப் போல மூன்று மடங்கு அளவிற்கு அரசுத் துறைகள் செய்கின்றன. இது விகிதாச்சார நிலைக்கு மாறுபட்டதாக உள்ளது.

•        முதல் 10 பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது, GERD, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தொழில் துறையின் பங்களிப்பு மிகக் குறைந்தபட்சமாக உள்ளது

•        புதுமை சிந்தனை படைப்புக்கு அதிக வரிச் சலுகைகள் அளித்தல், பங்கு மூலதனத்துக்கு அனுமதி போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகும் இந்த நிலை இருக்கிறது

•        ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவின் தொழில் துறை குறிப்பிடத்தக்க அளவுக்கு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

•        நாட்டில் பதிவு செய்துள்ள காப்புரிமைகளில் இந்தியாவில் வாழ்பவர்களின் பங்கு இப்போதைய 36 சதவீதத்தில் இருந்து அதிகரிக்க வேண்டும். முதல் 10 பொருளாதார நாடுகளில் இது 62 சதவீதமாக உள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாக இருக்கிறது.

•        புதுமை சிந்தனை உற்பத்தியை மேம்படுத்துவதற்கு, தொழில் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், தொழில் நிறுவனங்களை நவீனப்படுத்தி புதுமை சிந்தனை முயற்சிகளை அமல் செய்வதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்

பிரதமரின் ஜன ஆரோக்கியா திட்ட அமல் மற்றும் சுகாதாரத் துறை தாக்கங்கள்

•        அதிக தேவைகள் உள்ள சமுதாயத்தினருக்கு சுகாதார சேவை அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன ஆரோக்கியா திட்டம் (PM-JAY), குறுகிய காலத்தில் சுகாதாரத் துறையில் நல்ல பலன்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

•        டயாலிசிஸ் போன்ற அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகள், கோவிட் பெருந்தொற்று மற்றும் முடக்கநிலை காலத்தில் தொடர்  சிகிச்சைகள் ஆகியவற்றில் இத் திட்டம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பயன்படுத்தப்படுகிறது

•        தேசிய குடும்பநல ஆரோக்கிய கணக்கெடுப்பு (NFHS)-4 (2015-16) மற்றும் NFHS-5 (2019-20)  இடையில் இத் திட்டத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன

•        மேம்படுத்தப்பட்ட சுகாதாரக் காப்பீட்டு வரம்பு: பிகார், அசாம் மற்றும் சிக்கிமில் 2015-16 காலத்தைவிட 2019-20 காலத்தில் இத் திட்டத்தில் இணைந்த குடும்பங்களின் அளவு 89 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலக்கட்டத்தில் மேற்குவங்கத்தில் இது 12 சதவீதம் குறைந்துள்ளது

•        சிசு மரண விகிதம் குறைவு: 2015-16 முதல் 2019-20 வரையிலான காலத்தில் மேற்குவங்கத்தில் சிசு மரண விகிதம் 20 சதவீதம் குறைந்துள்ளது, அருகில் உள்ள 3 மாநிலங்களில் 28 சதவீதம் குறைந்துள்ளது

•        5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மரணம் குறைவு: 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மரணம் மேற்குவங்கத்தில் 20 சதவீதம் குறைந்துள்ளது, அருகில் உள்ள மாநிலங்களில் 27 சதவீதம் குறைந்துள்ளது

•        கருத்தடை சாதனங்கள் வசதி, பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் மாத்திரைகள் பயன்பாடு அருகில் உள்ள மாநிலங்களில் முறையே 36, 22 மற்றும் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்குவங்கத்தில் இதில்  ஏற்பட்டுள்ள மாற்றம், கணக்கில் கொள்ளத்தக்க அளவுக்கு இல்லை

•        அடுத்தடுத்த குழந்தைகள் பிறப்புக்கு இடையில் கால இடைவெளியை பராமரிப்பது தொடர்பான விஷயத்தில் மேற்குவங்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. அருகில் உள்ள மாநிலங்களில்  இது 37 சதவீதம் குறைந்துள்ளது

•        தாய் மற்றும் சேய் கவனிப்பு விஷயத்திலான குறியீடுகளில் மேற்குவங்கத்தைவிட, அருகில் உள்ள 3 மாநிலங்களின் செயல்பாடு மேம்பட்டிருக்கிறது.

•        இந்தத் திட்டத்தை அமல் செய்த மற்றும் அமல் செய்யாத மாநிலங்களுக்கு இடையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒவ்வொரு குறியீட்டிலும் சுகாதார தாக்கங்கள் மாறுபட்டிருக்கின்றன.

•        ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இத் திட்டத்தை அமல் செய்யாத மாநிலங்களைவிட, அமல் செய்த மாநிலங்களில் பல சுகாதார செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறைந்தபட்ச தேவைகள்

•        2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018 ஆம் ஆண்டில் எல்லா மாநிலங்களிலும் `குறைந்தபட்ச தேவைகள்’ நிலை மேம்பட்டிருக்கிறது

•        கேரளா, பஞ்சாப், ஹரியானா, குஜராத் மாநிலங்களில் இது அதிகபட்ச அளவிலும், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் குறைந்தபட்ச அளவாகவும் உள்ளன

•        தண்ணீர் கிடைத்தல், வீட்டுவசதி, கழிப்பறை வசதி, மைக்ரோ – சுற்றுச்சூழல் மற்றும் இதர வசதிகள் என்ற ஐந்து விஷயங்களில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது

•        2012க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில், பின்தங்கிய மாநிலங்கள் ஓரளவுக்கு ஆதாயம் பெற்ற காரணத்தால், மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் குறைந்துள்ளன

•        கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள வசதி படைத்தவர்களின் வீட்டு உபயோகப் பொருட்களுடன் ஒப்பிடும்போது, ஏழைகளின் வீடுகளில் உள்ள பொருட்களின் வகைகளில் இருந்த மாறுபாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

•        `குறைந்தபட்ச தேவைகள்’ கிடைக்கும் நிலை மேம்பட்டிருப்பதால், சிசு மரணம், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மரணம் போன்ற சுகாதாரக் குறியீடுகள் மேம்பட்டுள்ளன. கல்விக் குறியீட்டில் எதிர்காலத்தில் முன்னேற்றம் இருக்கும் என்பதற்கான தொடர்பைக் காட்டுவதாகவும் இது இருக்கிறது

•        மாநிலங்களில், கிராம மற்றும் நகர்ப்புறங்களில், வெவ்வேறு வருவாய் பிரிவினர் மத்தியில் குறைந்தபட்ச தேவைகள் கிடைக்கும் நிலையில் உள்ள மாறுபாடுகளைக் குறைக்க முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்

•        ஜலஜீவன் மிஷன், SBM-G, PMAY-G போன்ற திட்டங்கள், இந்த இடைவெளிகளைக் குறைக்கும் வகையிலான உத்திகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட வேண்டும்

•        குறைந்தபட்ச தேவைகள் கிடைக்கும் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய அனைத்து அல்லது கவனிக்கப்படும் மாவட்டங்களில், மாவட்ட அளவில் பொருத்தமான குறியீடுகள் மற்றும் நடைமுறைகளைப் பயன்படுத்தி, பெரிய அளவிலான வருடாந்திர வீட்டு உபயோகப் பொருள் கணக்கெடுப்பு தகவல் அடிப்படையில் குறைந்தபட்ச தேவைகள் குறியீடு (பி.என்.ஐ.) உருவாக்கப்பட வேண்டும்

நிதித்துறை மேம்பாடுகள்

•        கோவிட் 19 பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து பொருளாதார பாதிப்பை சரி செய்து மீட்பதற்கு, திட்டமிடப்பட்ட அணுகுமுறையை இந்தியா கடைபிடித்தது. பல நாடுகள் அமல் செய்த நேரடி ஊக்கத் திட்டங்களைப் போன்றதாக இது அமையவில்லை

•        2020-21 செலவினக் கொள்கை, ஆரம்பத்தில் பாதிப்புக்கு ஆளாகும் சமுதாயத்தினருக்கு உதவி அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் முடக்கநிலை தளர்த்தப்படும் நிலையில் தேவை மற்றும் முதலீட்டு செலவை ஊக்குவிக்கும் வகையில் அது திருத்தி அமைக்கப்பட்டது.

•        கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதிகபட்ச அளவை 2020 டிசம்பரில் எட்டியது

•        வரி நிர்வாகத் துறையில் சீர்திருத்தங்கள் செய்ததால் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்கும் நிலை நடைமுறை தொடங்கியது. நேர்மையாக வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வரி செலுத்தும் நடைமுறைக்கு ஒத்திசைவாக இருப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கப் படுகிறது

•        பெருந்தொற்று பாதிப்பின் சவால்களை சமாளிப்பதில் மாநிலங்களுக்கு தொடர்ந்து உதவி அளிக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது

வெளியுறவுத் துறை

•        கோவிட்-19 பாதிப்பால் உலக வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது, பொருட்கள் விலை குறைந்தது, வெளிநாட்டு நிதி சூழல்கள் கடுமையாகின, நடப்புக் கணக்கு நிலுவைகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கரன்சிகள் மீது அதிக தாக்கம் ஏற்பட்டது

•        2021 ஜனவரி 08 ஆம் தேதி இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு முன் எப்போதும் இல்லாத உச்சமாக 586 .1 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டது 18 மாதங்களுக்கான இறக்குமதிகள் மதிப்புக்கு இணையாக அது அமைந்தது

•        2019-20 நிதியாண்டின் 4வது காலாண்டில் இருந்து உபரி BoP எட்டும் அளவுக்கு துடிப்பான முதலீடு ஈர்ப்புடன், நடப்பு கணக்கு மிகைநிலையையும் இந்தியா எட்டியுள்ளது.

*  மூலதன கணக்கின் சமநிலை அதிகளவிலான அந்நிய நேரடி முதலீடு மற்றும்  அந்நிய சந்தை முதலீடுகளால் வலுப்பெற்றது

– 2020 ஏப்ரல்-அக்டோபரில் செய்யப்பட்ட $27.5 பில்லியன் நிகர அந்நிய நேரடி முதலீடு: 2019-20 நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களோடு ஒப்பிடும் போது 14.8% அதிகம்

– 2020 ஏப்ரல்-அக்டோபரில் செய்யப்பட்ட $28.5 பில்லியன் நிகர சந்தை நேரடி முதலீடு: கடந்த வருடத்தின் இதே காலத்தில் $12.3 பில்லியனாக இது இருந்தது

* 2021 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், பொருட்களின் இறக்குமதியில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் பயண சேவைகள் குறைந்ததன் காரணமாக:

– நடப்பு ரசீதுகளை (15.1%) விட நடப்பு கட்டணங்கள் (30.8% ஆக) வெகுவாக குறைந்தன

– நடப்பு கணக்கு உபரித்தொகை $34.7 பில்லியன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1%)

* 17 வருடங்களுக்கு பிறகு வருடாந்திர நடப்பு கணக்கு உபரித் தொகையோடு இந்தியா நிறைவு செய்கிறது

* 2020 ஏப்ரல்-டிசம்பரில் இந்தியாவின் பொருட்கள் வர்த்தகம் $57.5 மில்லியனாக இருந்தது. கடந்தாண்டின் இதே காலத்தில் இது $125.9 பில்லியனாக இருந்தது

* 2020 ஏப்ரல்-டிசம்பரில், பொருட்கள் ஏற்றுமதி மதிப்பான $200.8 பில்லியன்,  2019 ஏப்ரல்-டிசம்பரின் $238.3 பில்லியனோடு ஒப்பிடும் போது 15.7% குறைவாகும்:

–  பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதி  மேற்கண்ட காலத்தில் குறைவாக இருந்ததால், ஏற்றுமதி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன

–  பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் சாராத ஏற்றுமதிகள் நேர்மறையாக திகழ்ந்து 2020-21-இன் மூன்றாம் காலாண்டில் ஏற்றுமதி செயல்பாடுகள் முன்னேற்றமடைய உதவியது

–  பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் சாராத ஏற்றுமதிகளில், வேளாண்மை & அதை சார்ந்த பொருட்கள், மருந்துகள் மற்றும் தாதுக்கள் & கனிமங்கள் விரிவாக்கத்தை கண்டன

* 2020 ஏப்ரல்-டிசம்பரில், பொருட்கள் இறக்குமதி மதிப்பான $258.3 பில்லியன்,  2019 ஏப்ரல்-டிசம்பரின் $364.2 பில்லியனோடு ஒப்பிடும் போது 29.1% குறைவாகும்:

–  பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதியில் ஏற்பட்ட கடும் சரிவு ஒட்டுமொத்த இறக்குமதி வளர்ச்சியை பாதித்தது

– 2020-21-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறக்குமதிகள் கடுமையாக சரிந்தன; தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிகளில் ஏற்பட்ட நேர்மறை வளர்ச்சி மற்றும்  பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் சாராத, தங்கம் சாராத, வெள்ளி சாராத இறக்குமதிகளில் ஏற்பட்ட நேர்மறை வளர்ச்சியின் காரணமாக அடுத்து வந்த காலாண்டுகளில் சரிவின் வேகம் குறைந்தது.

–  பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் சாராத, தங்கம் சாராத, வெள்ளி சாராத இறக்குமதிகளின் வளர்ச்சிக்கு உரங்கள், காய்கறி எண்ணெய், மருந்துகள், கணினி வன்பொருள் மற்றும் பாகங்கள் ஆகியவை பங்களித்தன

* இறக்குமதிகள் குறைந்ததால் சீனா மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக சமநிலை மேம்பட்டது

* 2019 ஏப்ரல்-செப்டம்பரின் நிகர சேவை ரசீதுகளின் மதிப்பான $40.5 பில்லியனோடு ஒப்பிடும் போது, 2019 ஏப்ரல்-செப்டம்பரின் நிகர சேவை ரசீதுகளின் மதிப்பான $41.7 பில்லியன் நிலைபெற்றிருந்தது

* சேவைகள் துறையின் உறுதி மென்பொருள் சேவைகளால் வலுப்பெற்றது. மொத்த சேவை ஏற்றுமதிகளில் 49 சதவீதத்திற்கு மென்பொருள் சேவைகள் காரணமாக இருந்தன

* வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களால் அதிகளவில் செய்யப்படும் நிகர தனியார் பரிவர்த்தனை ரசீதுகள் 2021 நிதியாண்டின் முதல் அரையாண்டில் $35.8 பில்லியனாக இருந்தது. கடந்தாண்டின் இதே காலத்தோடு ஒப்பிடும் போது இது 6.7% குறைவாகும்

* 2020 செப்டம்பர் இறுதியில், இந்தியாவின் வெளிப்புற கடன் $556.2 பில்லியனாக இருந்தது. 2020 மார்ச் இறுதியுடன் ஒப்பிடும் போது, இது $2.0 பில்லியன் (0.4%) குறைவாகும்.

* கடன் பாதிப்பு குறியீடுகளில் மேம்பாடு:

–  மொத்தம் மற்றும் குறுகிய கால கடனுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு விகிதம் (அசல் மற்றும் மீதம்)

– வெளிப்புற கடனின் மொத்த அளவுக்கு குறுகிய கால கடனின் விகிதம் (அசல் முதிர்வு)

– 2020 செப்டம்பர் இறுதியில் கடன் சேவை விகிதம் (அசல் திரும்ப செலுத்துதல் மற்றும் வட்டி கட்டணத்துடன் சேர்த்து) 9.7%-க்கு அதிகரித்தது. 2020 மார்ச் இறுதியில் இது 6.5 சதவீதமாக இருந்தது

* ரூபாய் வளர்ச்சி/வீழ்ச்சி

– 6-நாணய  NEER (பெயரளவிலான செலாவணி மதிப்பு) விகிதத்தின் படி (வர்த்தகம் சார்ந்த அளவுகள்), 2020 மார்ச்சுடன் ஒப்பிடும் போது ரூபாயின் மதிப்பு 4.1% குறைந்தது; REER (உண்மையான செலாவணி மதிப்பு) விகிதத்தின் படி 2.9% உயர்ந்தது

– 36-நாணய  NEER (பெயரளவிலான செலாவணி மதிப்பு) விகிதத்தின் படி (வர்த்தகம் சார்ந்த அளவுகள்), 2020 மார்ச்சுடன் ஒப்பிடும் போது ரூபாயின் மதிப்பு 2.9% குறைந்தது; REER (உண்மையான செலாவணி மதிப்பு) விகிதத்தின் படி 2.2% உயர்ந்தது

* அந்நிய செலாவணி சந்தைகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் இடையீடுகள் நிதி நிலைத்தன்மை மற்றும் ஒழுங்கை  உறுதி செய்ததோடு, ரூபாயின் நிலையற்றத்தன்மை மற்றும் ஒருபக்க வளர்ச்சியை கட்டுப்படுத்தியது

* ஏற்றுமதிகளை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

– உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்

– ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான கட்டணங்கள் மற்றும் வரிகளில் நிவாரணம்

* சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் முன்னெடுப்புகளில் மேம்பாடு

நாணய நிர்வாகம் மற்றும் நிதி இடையீடு

* 2020-இல் இணக்கமான நிதி கொள்கை: 2020 மார்ச்சில் இருந்து ரெப்போ விகிதம் 115 புள்ளிகள் குறைக்கப்பட்டன

* 2020-21 நிதியாண்டில் முறையான பணப்புழக்கம் இதுவரையில் உபரியாக இருந்து வருகிறது. கீழ்கண்டவை உள்ளிட்ட மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்தது:

– திறந்தவெளி சந்தை செயல்பாடுகள்

– நீண்டகால ரெப்போ செயல்பாடுகள்

– இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ரெப்போ செயல்பாடுகள்

* 2020 மார்ச் இறுதியில் 8.21 சதவீதமாக இருந்த பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து விகிதம், 2020 செப்டம்பர் இறுதியில் 7.49 சதவீதமாக குறைந்தது

* சேமிப்பு மற்றும் கடன் விகிதங்களுக்கான குறைவான கொள்கை விகிதங்களின் நிதி பரிமாற்றம் நிதியாண்டு 2020-21-இல் மேம்பட்டது

* நிப்டி-50 மற்றும் பிஎஸ்ஈ சென்செக்ஸ் சாதனையளவை எட்டி முறையே 14,644.7 மற்றும் 49,792.12 என்ற அளவில் 2021 ஜனவரி 20-இல் முடிவடைந்தன

* திவாலாதல் மற்றும் நொடித்துப் போதல் குறியீட்டின் மூலமாக (அது அமலுக்கு வந்ததில் இருந்து) பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளின் கடன் மீட்பு விகிதம் 45%-க்கும் அதிகமாக இருந்தது

விலைகள் மற்றும் பணவீக்கம்

* தலைப்பு நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம்:

– குறிப்பாக உணவு பணவீக்கத்தின் காரணமாக 2020 ஏப்ரல்-டிசம்பரின் போது சராசரியாக 6.6 சதவீதமாக இருந்து, 2020 டிசம்பரில் 4.6 சதவீதமாக இருந்தது. (காய்கறி விலையேற்றத்தின் காரணமாக 2019-20-இல் 6.7 சதவீதத்தில் இருந்து 2020 ஏப்ரல்-டிசம்பரில் 9.1 சதவீதமாக உயர்ந்தது)

– கொவிட்-19 பொதுமுடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட ஆரம்பகால இடையூறுகளின் விளைவால் உருவான விலையேற்றத்தின் காரணமாக 2020 ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு தலைப்பு மற்றும் அதன் துணைக் குழுக்கள் பணவீக்கத்தை சந்தித்தன

– 2020 நவம்பரில் பெரும்பாலான துணைக் குழுக்களில் ஏற்பட்ட மிதமான விலையேற்றமும், நேர்மறை அடிப்படை விளைவும் பணவீக்கத்தை குறைக்க உதவின

* நுகர்வோர் விலை குறியீட்டின் ஊரக-நகர்ப்புற பணவீக்கம் 2020-இல் சரிவை சந்தித்தது:

நவம்பர் 2019-இல் இருந்து, நுகர்வோர் விலை குறியீட்டின் ஊரக பணவீக்கத்தின் இடைவெளியை நுகர்வோர் விலை குறியீட்டின் நகர்ப்புற பணவீக்கம் சமன் செய்தது

உணவு பணவீக்கம் தற்போது கிட்டத்தட்ட குறைந்துள்ளது

எரிபொருள் மற்றும் விளக்குகள், ஜவுளி மற்றும் காலணி போன்ற நுகர்வோர் விலை குறியீட்டின் இதர கூறுகளில் ஊரக-நகர்ப்புற பணவீக்கத்தின் மாறுபாடு உணரப்பட்டது

* 2019 ஏப்ரல்-டிசம்பர் மற்றும் 2020-21 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கத்தின் முக்கிய காரணியாக உணவு மற்றும் பானங்கள் இருந்தன:

2019 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தின் 53.7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, 2020 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் 59 சதவீதமாக பங்களிப்பு அதிகரித்தது

* 2020 ஜூன் மற்றும் 2020 நவம்பருக்கிடையே முழு சாப்பாட்டின் விலை அதிகரித்தது. ஆனால், பல்வேறு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைந்ததை பிரதிபலிக்கும் விதமாக, டிசம்பரில் இதன் விலை குறைந்தது.

* மாநில-வாரியான நிலைமை

நடப்பு ஆண்டில் பெரும்பாலான மாவட்டங்களில்  ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் அதிகரித்தது

பிராந்திய மாறுபாடுகள் இருக்கின்றன

2019 ஜூன்-டிசம்பரின் (-)0.3% முதல் 7.6% வரை ஒப்பிடும் போது,  2020 ஜூன்-டிசம்பரில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முழுவதும் 3.2% முதல் 11% ஆக பணவீக்கம் இருந்தது.

*  குறியீட்டில் உள்ள உணவு பொருட்களின் அதிக எடையின் காரணமாக ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கத்தின் முக்கிய காரணியாக உணவு பணவீக்கம் இருந்தது

* உணவு பொருட்களின் விலைகளை நிலைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

வெங்காய ஏற்றுமதிக்கு தடை

வெங்காய சேமிப்புக்கு உச்சவரம்பு

தானிய இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு

* தங்க விலைகள்:

கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்றத்தன்மையின் காரணமாக தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்கள் திரும்பியதால், அதன் விலை ஏறியது

மற்ற சொத்துகளை ஒப்பிடும் போது, 2020-21 நிதி ஆண்டில் அதிக லாபத்தை தங்கம் அளித்தது

* இறக்குமதி ஆணைகள் மீதான கவனத்தில் நிலைத்தன்மை:

சமையல் எண்ணெய்களின் இறக்குமதிகள் மீது அதிகளவில் சார்ந்திருப்பது, இறக்குமதி விலைகளில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகும் ஆபத்தை ஏற்படுத்தும்

உள்நாட்டு சமையல் எண்ணெய் சந்தையின் உற்பத்தி மற்றும் விலைகளை பாதிக்கும் இறக்குமதிகள், தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி கொள்கையில் அடிக்கடி செய்யப்படும் மாற்றங்கள், விவசாயிகள் / உற்பத்தியாளர்களிடையே குழப்பத்தை அதிகரித்து, இறக்குமதிகளை தாமதப்படுத்தும்.

நீடித்த வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம்

* கொள்கைகள் மற்றும் திட்டங்களில்  நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கான துடிப்பான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது

* நீடித்த வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் உயர்மட்ட அரசியல் சபைக்கு  தன்னார்வ தேசிய ஆய்வு சமர்பிக்கப்பட்டது

* 2030 செயல்திட்டத்தின் கீழ் உள்ள இலக்குகளை அடைவதற்கான எந்த யுக்திக்கும்  நீடித்த வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர்ப்படுத்தல் முக்கியமாகும்

நீடித்த வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதற்கான அமைப்புகளை பல்வேறு மாநிலங்கள்  / யூனியன் பிரதேசங்கள் உருவாக்கியுள்ளன. மாவட்ட அளவில் சிறந்த ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டிற்காக ஒவ்வொரு துறையிலும் இதற்கான செயல்வடிவங்க்கள் உருவாக்கப்பட்டுள்ளன

* வரலாறு காணாத கொவிட்-19 நெருக்கடிக்கு இடையிலும், வளர்ச்சி யுக்தியின் அடித்தளமாக  நீடித்த வளர்ச்சி உள்ளது

* பருவகால ஆபத்துகளை புரிந்துகொள்ளுதல், குறைத்தல் மற்றும் எதிர்கொள்வதற்கான தயார்நிலை ஆகியவற்றுக்கான நோக்கங்கள் மீது கவனம் செலுத்துவதற்காக பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் எட்டு தேசிய இயக்கங்கள் அமைக்கப்பட்டன.

* பருவநிலை மாற்ற நடவடிக்கையின் முக்கிய ஊக்கியாக நிதி இருக்கும் என்று இந்தியாவின் தேசிய அளவில் முடிவு செய்யப்பட்ட பங்களிப்புகள் கூறுகிறது

* இலக்குகளை குறிப்பிட்ட அளவில் நாடு அதிகரிக்கும் நிலையில், நிதி பரிசீலனைகள் முக்கியமானவையாக விளங்கும்

* பருவநிலை நிதிக்காக 2020-க்குள் $100 பில்லியனை ஒன்று திரண்டு திரட்டுவது என்னும் குறிக்கோள் வளர்ச்சியடைந்த நாடுகளில் எட்டப்படவில்லை

* 2021-க்கு COP26-ஐ தள்ளி வைத்துள்ளது பேச்சுவார்த்தைகளுக்கும், ஆதாரம் சார்ந்த இதர பணிக்கும் குறைவான அவகாசத்தையே அளிக்கிறது

* சர்வதேச பத்திர சந்தைகளில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இடையிலும், 2020-இன் முதல் பாதியில் பத்திர வெளியீடு 2019-இல் இருந்தே குறைந்தது. கொவிட்-19 இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.

* ‘உலக சூரியசக்தி வங்கி’ மற்றும் ‘ஒரே சூரியன், ஒரே உலகம் ஒரே தொகுப்பு முன்னெடுப்பு’ என்னும் இரண்டு புதிய முன்னெடுப்புகளை சர்வதேச சூரியசக்தி கூட்டணி தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் சூரிய ஒளி எரிசக்தி துறையில் ஒரு புரட்சியை இவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வேளாண் & உணவு மேலாண்மை

கொவிட்-19 ஊரடங்கு உள்ளிட்ட இடர்பாடுகளின் போதும் இந்தியாவின் வேளாண் (அது தொடர்பான செயல்பாடுகள்) துறை தனது வளர்ச்சியை 3.4% அதிகரித்திருப்பதோடு 2020-2021 ஆம் ஆண்டில் விலையை நிலையாக வைத்திருந்தது.

2019-20 ஆம் நிதியாண்டில் வேளாண் மற்றும் அது தொடர்பான துறை நாட்டின் ஒட்டு மொத்த மதிப்பு கூட்டுதலில் தனது பங்கை 17.8% அளவுக்கு அதிகரித்தது.

2018-19 ஆம் ஆண்டைக் காட்டிலும்,  2019-20 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த உணவு உற்பத்தி 11.44 மில்லியன் டன்னாக இருந்தது.

2019-20 ஆம் நிதியாண்டில் ₹13,50,000 கோடியை காட்டிலும், நாட்டின் இயல்பான வேளாண் கடனின் அளவு ₹13,92,469.81 கோடி ஆக இருந்தது. தற்போது 2020-21 ஆம் நிதியாண்டில் இதன் இலக்கு ₹15,00,000 நிர்ணயிக்கப்பட்டு நவம்பர் 30, 2020 வரை ₹ 9,73,517.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

2020 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவித்தபடி பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 கோடி பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் & பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

2021 ஜனவரியில் இதுவரை 44,673 மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 4.04 லட்சம் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.

பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5.5 கோடி விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. 2021 ஜனவரி 12-ந் தேதி வரை ₹90,000 கோடி காப்பீட்டு பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் மட்டும் ₹8741.30 கோடி அளவுக்கு காப்பீட்டு பலன்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு மூலம் 70 லட்சம் விவசாயிகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

2020 டிசம்பரில் மட்டும் பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 7-வது தவணையாக ₹18,000 கோடி ரூபாய் 9 கோடி விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

2019-20 காலத்தில் 14.16 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு மீன்பிடிக்கப்பட்ட அளவு உயர்ந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ₹2,12,915 அளவுக்கு வருவாய் ஈட்டித் தந்ததோடு தேசிய ஒட்டு மொத்த மதிப்பு கூட்டுதலை  1.24%  உயர்த்தியதோடு வேளாண் துறையில் 7.28% அளவுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தியது.

 

2011-12 முதல் 2018-19 வரையிலான 5 ஆண்டுகளில் உணவுப்பதப்படுத்துதல் நிறுவனங்கள் துறை ஆண்டுதோறும் 9.99% வளர்ச்சி அடைந்து வருவதோடு வேளாண் துறையில் 3.12% வளர்ச்சியும், உற்பத்தித் துறையில் 8.25%-மும் வளர்ச்சி அடைந்துள்ளது.

2020 நவம்பர் வரை பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் 80.96 கோடி பயனாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ₹75,000 கோடி மதிப்பில் 20 கோடி மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உணவுத் தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத் தொகுப்பு: ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு (மே முதல் ஆகஸ்ட் வரை) 8 கோடி புலம்பெயர்ந்தவர்களுக்கு ₹3109 கோடி அளவுக்கு உணவுத் தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில் & கட்டமைப்புத் துறை

தொழில் துறை உற்பத்திக் குறியீடும், நாட்டின் வி-வடிவ பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தது

தொழில் துறை உற்பத்திக் குறியீடும், கொரோனாவுக்கு முந்தைய அளவை எட்டியது.

முதலீட்டு செலவீனத்தை அதிகரித்தது, தடுப்பூசி இயக்கம் & நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்தது ஆகியவை காரணமாக தொழில் துறை நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% அளவிலான பொருளாதார மேம்பாட்டு ஊக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

எளிதில் தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 63-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு 77 ஆம் இடத்தில் இந்தியா இருந்தது. முன்னேறிய முதல் 10 நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்து 3-வது முறையாக
7-வது இடத்தை பிடித்தது.

அன்னிய நேரடி முதலீட்டுப் பங்குகளின் வரத்து 2020 ஆம் நிதியாண்டில் $49.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2019 ஆம் நிதியாண்டில் $44.37 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. உற்பத்திச் சாரா துறையிலும், ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, உலோகவியல், மரபுசாரா எரிசக்தி, ரசாயனம், உணவுப்பதப்படுத்துதல், பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு போன்ற உற்பத்தித் துறைகளிலும் இந்த அன்னிய நேரடி முதலீட்டுப் பங்குகள் அனைத்தும் பெரிதளவில் கிடைக்கப் பெறுகின்றன.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், ₹1.46 லட்சம் கோடி மதிப்பில் 10 முக்கிய துறைகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

சேவைத் துறை

கொவிட்-19 ஊரடங்கு காலத்தின் போது இந்தியாவின் சேவைத் துறை 2020-21 நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 16% அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

கொவிட்-19 ஊரடங்கு காலத்தில், ரயில் & சரக்குப் போக்குவரத்து மூலம் சேவைகள் கொள்முதல் மேலாண்மை பட்டியல் வளர்ச்சி அடைந்துள்ளது.

கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் பாதிப்படைந்த நிலையில் இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி 34% அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. இது 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் $23.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு எட்டியுள்ளது.

இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு சேவைத் துறையில் 54%-க்கும் மேலாக உள்ளது.

அண்மைக் காலங்களில் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை காட்டிலும், சேவைத் துறை ஏற்றுமதியின் அளவு 48% அளவுக்கு உயர்ந்துள்ளது

ஏற்றுமதி, இறக்குமதி போன்ற சரக்குகளை கையாள்வதில் ஏற்படும் நேரம் 2010-11 ஆம் ஆண்டில் இருந்த 4.67 நாட்களிலிருந்து 2019-20 ஆண்டில் 2.62 நாட்களாக குறைந்துள்ளது.

கொவிட்-19 தொற்று காலத்திலும், நாட்டில் தொழில் தொடங்கும் சூழல் வளர்ந்துள்ளது. 38 நிறுவனங்களில் இதுவரை இல்லாத அளவில் 12 புதிய நிறுவனங்கள் கடந்த ஆண்டில் தொழிலை தொடங்கி உள்ளன.

கடந்த 60 ஆண்டுகளில் இந்திய விண்வெளித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. விண்வெளித் துறையில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவித்தல், தனியாரை அனுமதித்தல் போன்ற சீர்திருத்தத்தின் கீழ் 2019-20 ஆம் நிதியாண்டில் விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்திற்காக $1.8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளது.

சமூக கட்டமைப்பு, வேலைவாய்ப்பு & மனிதவள மேம்பாடு

2020-21 நிதியாண்டின் சமூக நலனுக்கான செலவினம் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த ஆண்டைக் காட்டிலும் சதவீத அளவில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

189 நாடுகளை கொண்ட மனிதவள மேம்பாட்டு பட்டியலில் இந்தியா 2019 ஆம் ஆண்டு 131-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய வருவாய் & தனிநபர் வருவாய் 2018 ஆம் ஆண்டில் $6,427-அமெரிக்க டாலராகவும், 2019  ஆம் ஆண்டில் $6,681 அமெரிக்க டாலராகவும் இருக்கிறது. இதே போல் தனி மனித சராசரி வாழ்நாள் அளவு 2018-ல் 69.4 ஆண்டாகவும், 2019-ல் 69.7 ஆண்டாகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் கணினி, மடிகணினி, ஸ்மார்ட் ஃபோன் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் இணையதள பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது.

2019 ஜனவரி முதல் 2020 மார்ச் வரை நகர்புறங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் & வேலைநாள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசின் ஊக்க நடவடிக்கைகள் மூலம் ஆத்ம நிர்பர் பாரத் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு பகுக்கப்பட்டுள்ளது.

பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு வீத வரையறை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள், வருவாய் அற்ற, குடும்ப & வீட்டுப் பணிகளில் சமச்சீரற்ற அளவிற்கு அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

ஊதியம் & தொழில் முன்னேற்றம் போன்ற பணியிடத்தில் உள்ள பாகுபாடுகளை களைய வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கான பிற மருத்துவ & சமூக பாதுகாப்பு சலுகைகள் உள்ளிட்டவைகளை  மேம்படுத்த வேண்டும்.

பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத் தொகுப்பில் முதியோர், விதவை, ஆதரவற்றோர், ஊனமுற்றோர் போன்றவர்களுக்கு தேசிய சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் 20.64 கோடி பெண் பயனாளிகளுக்கு ரூ.500 வீதம் 3 மாதங்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு உருளை 3 மாதங்களுக்கு விலையில்லாமல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

63 லட்சம் சுயஉதவிக் குழு பெண்களுக்கு 10 லட்சத்திலிருந்து 20 லட்சத்திற்கு எந்தவித பிணையமும் இல்லாமல் கடன் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 6.85 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் 182-லிருந்து 20 ரூபாய் அதிகரித்து 202 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

கொவிட்-19-க்கு எதிராக இந்தியாவின் போர்

முன்கூட்டியே ஊரடங்கு, சமூக இடைவெளி, பயணத்திற்கு தடை, கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா பரவலை பெரிதும் தடுக்க முடிந்தது.

மேலும் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருந்துகள், கிருமி நாசினிகள், முகக்கவசம், பிபிஇ கவச உடை, சுவாச கருவிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் தற்சார்பு நிலையை நாடு எட்டியது.

உலகின் மிகப் பெரிய கொவிட்-19-க்கான தடுப்பூசி செலுத்தும் இயக்கம் 2021 ஜனவரி 16-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் 2 தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு செலுத்தப்படுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...