இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு ஒரேநேரத்தில் நான்கு முனைகளில் செயல்படுகிறது. என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
கொரோனா காலகட்டத்துக்கு பிறகு இந்திய சுகாதாரத் துறைக்கான மரியாதை அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கான தேவை உலகம்முழுவதும் உயரப்போகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
சுகாதாரத் துறை தொடர்பான பட்ஜெட் செயல்படுத்தல் குறித்த காணொளியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்றின்போது இந்தியாவின் சுகாதாரத்துறை காட்டிய வலிமையை உலகம் குறிப்பிட்டுள்ளது, கொரோனா காலகட்டத்துக்கு பிறகு இந்திய சுகாதாரத் துறைக்கான மரியாதை அதிகரித்துள்ளது.
எதிர்காலத்தில், இந்திய மருத்துவர்கள் மற்றும் துணைமருத்துவ ஊழியர்களுக்கான தேவை உலகம் முழுவதும் உயரப்போகிறது,இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு ஒரேநேரத்தில் நான்கு முனைகளில் செயல்படுகிறது. நோயைத் தடுப்பது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் சுகாதார அணுகல், சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சுகாதார நிபுணர்களின் தரம் மற்றும் அளவு அதிகரித்தல் ஆகியவையே அந்த நான்குமுனை ஆகும்.
சுகாதார துறைக்கு இப்போது ஒதுக்கப்பட்ட பட்ஜெட் மிகவும் தனித்துவமானது. இந்தத்துறை மீதான அரசின் உறுதிப்பாட்டைக இதுகாட்டுகிறது. மேட் இன் இந்தியா தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு நாடுதயாராக இருக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து காசநோயை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். முகமூடிகளை அணிவது, ஆரம்பகாலத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே காசநோயை தடுப்பதில் முக்கியம் ஆகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |