பாஜக.,வின் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்தல் அறிக்கை

திருவையாறு சட்டமன்றத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு தேர்தல் அறிக்கை பாஜக சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் தமிழ்தாமரை வெங்கடேசால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜேபி நட்டா அவர்களிடம்  கொடுக்கப்பட்டது

 

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்தல் அறிக்கை

1) 90 சதவீதத்துக்கு மேலே பாதிக்கப்பட்ட (அதிக பராமரிப்பு தேவைப்படும்) கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5000 ஆயிரமும் . 80 சதவீதத்திற்கு மேல் பாதிக்க பட்டவர்களுக்கு 3000 ஆயிரமும். 60 சதவீதத்துக்கு மேலே பாதிக்க பட்டவர்களுக்கு மாதம் ரூ 2500ரும் உதவித் தொகையாக வழங்கப்படும். இதில் 5000 ஆயிரம் உதவித்தொகை பெறுவோருக்கு வங்கியில் 3500 மட்டுமே வரவு வைக்கப்படும். மீதி 1500 சிறப்பு பள்ளி கட்டணமாகவோ, போக்குவரத்து செலவாகவோ (பள்ளி வாகன செலவு) 22 வயது வரைக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வஙகி கணக்கில் வரவு வைக்கப்படும் , இது இளம் வயது கல்வியை ஊக்குவிக்கும். 22 வயதுக்கு மேல் முழு தொகையும் தொடர்புடையவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

2.) வழக்கமாக மூன்று சக்கர பைக் இலவசமாக வழங்கப் பட்டாலும் , அதன் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே தகுதி படைத்த மாற்றுத்திறனாளிகள் பல்லாயிரம் பேர் பல வருடங்களாக காத்திருக்கின்றனர். ஒரு கால் மட்டும் செயல் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அதுவும் கிடைப்பது இல்லை. எனவே ஓரளவு வாங்கும் சக்தி இருந்தும் அதிக விலை காரணமாக வாங்க முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக மூன்று சக்கர பைக்கின் விலையில் 40% மானியம் வழங்கப்படும். இது பேட்டரி வீல் சேருக்கும் பொருந்தும்.

3) மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக தனியார் துறையிலும் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஊக்குவிப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். 300 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும். இரண்டு கைகளும் ஊனம் இல்லாமல் மருத்துவ தகுதி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு எலெக்ட்ரிக் ஆட்டோ 40 சதவீத மானியத்துடன் வங்கி கடனாக தரப்படும். முறையான பயிற்சிக்கு பின் அவர்களுக்கு சிறப்பு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

4) மாற்றுத் திறனாளிகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் முகமாகவும், கடுமையான ஊனம் மற்றும் பல சூழல்கள் காரணமாக, நல்ல மதிப்பெண் எடுத்தும் இயலாமையால் தொலைதூர கல்வியை நாடும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க செய்யும் முகமாக முன்னணி கல்வி நிறுவனங்களில் 25% வருகைப் பதிவேடு, 50% ஆன்லைன் மூலமாக லைவ் வகுப்புகள் என்ற முறை கொண்டுவரப்படும். இதன் மூலம் தரமான கல்வி மற்றும் கல்லூரியிலேயே படித்த அனுபவத்தை தரும். இது அவர்கள் பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு பெற்று தரும்.

5) 80%க்கு மேல் ஊனத்தால் (LD, MD,CP, MR) பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அவர்களை பள்ளிக்கு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு எளிதாக அழைத்து செல்லும் முகமாக இரு சக்கர வாகனம் வாங்க மானியம் தரப்படும்.

6) அரசு துறையில் 2 வருடத்துக்கு மேல் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளின் பணி நிரந்தரம் செய்யப்படும்.

7) ஒரு குடும்பத்தில் ஏதேனும் ஒரு ஊனத்தால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால், ஏதோ ஒரு விதத்தில் அந்த குடும்பமும் பலவீனமாகி விடுகிறது. அந்த மாற்று திறனாளிகளை பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கிடைக்கச் செய்ய நான்கு மடங்கு போராட வேண்டியுள்ளது. எனவே அந்த குடும்பத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, மாற்று திறனாளிபாலின் குடும்பத்தினருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தருவது குறித்து ஆராயப்படும். அதாவது ஒரு மாற்று திறனாளி கல்லூரி படிப்பில் தனது கோட்டாவை பயன்படுத்தவில்லை என்றால், அவரது சகோதரன் சகோதரியில் யாரோ ஒருவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு முறையில் வாய்ப்பு தரப்படும். அதேபோன்று அவர் அரசு வேலை வாய்ப்பை பெறவில்லை என்றால் அவரது சகோதர சகோதரியில் யாரோ ஒருவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு முறையில் வாய்ப்பு தரப்படும். அதே அந்த மாற்று திறனாளி திருமணமாகி குழந்தைகள் இருந்தால் அவரது வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கல்வியில் முன்னுரிமை தரப்படும். இதில் அரசு வேலைவாய்ப்பு முன்னுரிமையை ஒரு மாற்றுத்திறனாளி தனக்கோ, தன குடும்பத்துக்கோ, அல்லது தன வாரிசுக்கோ யாரோ ஒருவருக்குத்தான் பயன்படுத்த முடியும்..

8) ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஆசிரியர் தேர்வுகளின் மூலம் பணியமர்த்த படுவார்கள். இதன் மூலம் குறிப்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் போராட்டங்களுக்கு ஒரு விடிவு ஏற்படும்.

9) மண்டல அளவில் சிறப்பு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும், இங்கு காது கேலாதோர், வாய்பேச இயலாதோர், பார்வையற்றோர் கைகால் ஊனமுற்றோர் உள்ளிட்ட அணைத்து தரப்பினருக்கும் அவரவருக்கு பொருந்த கூடிய தொழிற்பயிற்சிகள் 2 வருடகால அளவுக்கு அளிக்கப்படும் இதில் மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினரும் பயிற்சி பெற சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு தரப்படும். மேலும் இதில் பயிற்சி பெற்றோர் குழுவாக இனைந்து புதிய தொழில் நிறுவனங்களை அமைக்க 25 லட்சம் முதல் 5 கோடி வரை மானிய கடன் வழங்கப்படும் இதன் மூலம் பாரத பிரதமரின் சுயசார்பு இந்தியா வலிமை பெரும். இந்த தொழிற் மையத்துக்குள்ளேயே மண்டல திவ்யாங் (மாற்றுத் திறனாளி) தொழில் வளர்ச்சி கூட்டுறவு வங்கி உருவாக்கப்படும். இதன் மூலம் கடன் வளங்கள் எளிமைப்படுத்தப்படும். இது முற்றிலும் மாற்றுத் திறனாளிகளினாலே இயக்கப்படும். இந்த பயிற்சி மையத்துக்குள்ளேயே கண் பார்வையற்றோருக்கு சிறப்பு பிரெய்லி நூலகம் அமைக்கப்படும். போட்டித் தேர்வு மற்றும் பல்வேறு துறைகளுக்கான பிரெய்லி நூல்கள் கிடைக்க வசதி செய்யப்படும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக போதுமான வாசிப்பாளர்கள் பணியமர்த்தப்படுவர்.

10) 2018 க்கு முன்பு பல்வேறு சூழல்களால் கடன்வாங்கி கட்டமுடியாமல் (5 லட்சத்துக்குள்) இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வங்கி வட்டி தள்ளுபடி செய்யப்படும். அவர்கள் புதிய கடனை பெற்றதாக கருதி முதலை மட்டும் பல தவணையாக செலுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும், தகுதியான மாற்றுத்திறனாளி என்று வங்கி கருதினால் மேலும் அவர்களுக்கு கூடுதல் கடன் வழங்க ஊக்குவிக்க படும்.

11) மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவே, அவர்களது கல்வி வளர்ச்சிக்காகவே 5ந்து வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்களின் தொகுப்பு ஊதிய முறை காலமுறை ஊதியமாக மாற்றப்படும்.

12) சட்ட மேலவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் (சட்ட மேலவை கொண்டுவருவது என்பது பாஜக தேர்தல் வாக்குறுதியில் உள்ளது)

One response to “பாஜக.,வின் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்தல் அறிக்கை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...