மம்தாவின் ஆட்டம் முடிய போகிறது

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தாவின் ஆட்டம் முடிய போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மேற்குவங்க மாநிலம் பர்தமான் பகுதியில் பாஜக சார்பில் திங்கள் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மேற்குவங்கத்தில் நடைபெற்ற நான்குகட்ட வாக்குப்பதிவில், மக்கள் பலபவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஆனால், இத்தேர்தலில் பாஜக ஏற்கெனவே தனது சதத்தை நிறைவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் ஆட்சியிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் அகற்றப்படும். நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தாபானர்ஜி தோல்வி அடைவார். அவரின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2-ஆம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்றார்.

நாடியா மாவட்டம், கல்யாணியில் நடைபெற்ற மற்றொருகூட்டத்தில் மோடி பேசியதாவது:
திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர், தலித்துகளை பிச்சைக்காரர்கள் எனக் கூறி கொச்சைப் படுத்துகின்றனர். மம்தாவின் ஆதரவு இல்லாமல், அவரது கட்சியினர் இத்தகைய கருத்துகளைக் கூறமுடியாது. ஆட்சேபகரமான இத்தகைய கருத்துகளைக் கூறிய தமதுகட்சியினரை முதல்வர் மம்தா கண்டிக்கவில்லை. அதற்காக அவர் வருத்தமும் தெரிவிக்க வில்லை. இதன் மூலம் மம்தா மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். தலித்துகளை அவமதித்ததன் மூலம் அவர் பெரும்பாவம் செய்துவிட்டார்.

மம்தாவின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உங்கள் (மம்தா) கோபத்தை வெளிப்படுத்த விரும்பினால், அதை என்மீது பிரயோகம் செய்யுங்கள். ஆனால் மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம்.

கூச்பிஹாரில் கடந்த 10-ஆம் தேதி நடந்த வன்முறையின் பின்னணியில் மம்தாபானர்ஜி உள்ளார். அங்கு மத்திய படைகளுக்கு எதிராக மக்களை அவர் தூண்டிவிட்டார். வன்முறையைத் தடுக்க சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழக்க நேரிட்டது.

மேற்கு வங்கத்திற்கு வந்த துணிச்சலான பிகார் போலீஸ் அதிகாரி அண்மையில் அடித்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கண்ட அதிர்ச்சியில், அவரது தாயாரும் இறந்து விட்டார். அந்த அதிகாரியின் தாய் உங்களுக்கு (மம்தா) தாய்மாதிரி இல்லையா? நீங்கள் (மம்தா) எவ்வளவு இரக்கமற்றவர் என்பது இங்குள்ள எந்த ஒருதாய்க்கும் தெரியாது.

வெற்றியும் தோல்வியும் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். ஆனால் மக்களின் வாக்களிக்கும் உரிமையைப்பறிக்க உங்களுக்கு (மம்தா) அதிகாரம் கிடையாது.மேற்குவங்க மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க இரட்டை என்ஜின் கொண்ட அரசு அதிகாரத்திற்கு வரவேண்டும். அதற்காக, தேர்தலில் அனைவரும் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி ‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை ...

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகு ...

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகுதிகளில் களமிறங்கும் பாஜக மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...