ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்கு பதிலாக பேனாவும் புத்தகமும் இருப்பதாக மோடி நெகிழ்ச்சி

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், நோட்டுப் புத்தகங்களும் இருப்பதாகக் கூறி பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார். பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மிரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. மக்கள் தைரியமாக வீடுகளை விட்டு வெளியே வந்து ஓட்டு போட்டுள்ளனர். இதுவரையில் நடைபெற்ற 7 தேர்தல்களுடன் ஒப்பிடும் போது, நேற்று நடந்த தேர்தலில் தான் அதிகபட்சமாக 60.21 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுயநல அரசியலால், காஷ்மீரில் உள்ள இந்துக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளனர். காஷ்மிரில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க தீவிரமாக உள்ளன. இந்த 3 கட்சிகளும் காஷ்மீருக்கு அழிவைத் தந்துள்ளன. இந்த கட்சிகள் இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக அநீதியை இழைத்துள்ளன. முன்பு லால் சவுக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றுவதற்கே அச்சுறுத்தல் இருந்து வந்தது. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது.ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்து இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே பா.ஜ.,வின் நோக்கமாகும், எனக் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.