சீதாராம்யெச்சூரி மகனின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி மகனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லி அருகேயுள்ள குருகிராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று (ஏப். 22) காலை அவர் உயிரிழந்தார். ஆஷிஷ் பத்திரிகையாளராகவும் பணியாற்றி வந்தவர்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

மகன் ஆஷிஷை இழந்துதவிக்கும் சீதாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையும் வகையில் ஓம்சாந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா தொற்றுக்கு எனது மூத்தமகன் ஆஷிஷ் யெச்சூரியை இழந்துவிட்டேன் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்து கொள்கிறேன். கடினமான நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கைஊட்டிய அனைவருக்கும், என் மகனுக்கு சிகிச்சையளித்த் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...