பாதுகாப்பு கொள்கை இல்லாமல் எந்தநாடும் வளா்ச்சிகாண இயலாது

பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் முதல் முறையாக நாட்டின் பாதுகாப்புக்கென பிரத்யேககொள்கை வகுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளாா்.

எல்லை பாதுகாப்புப்படையில் (பிஎஸ்எப்) சிறப்பாக செயலாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கம் அளித்து கௌரவிக்கும் விழா புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் பிஎஸ்எப் படையின் முதல் தலைவரான கே.எப்.ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவாற்றினாா். அதில் அமித்ஷா பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனிக்கொள்கை உள்ளதா என்ற கேள்வி அடிக்கடி எழுவதுண்டு. பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முன்பாக நாட்டுக்கென பிரத்யேக, சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை காணப்பட வில்லை.

முந்தைய ஆட்சிக்காலங்களில் இயற்றப்பட்ட பாதுகாப்பு கொள்கைகள் அனைத்தும் வெளியுறவு கொள்கையால் வழிநடத்தப் படுவதாகவே இருந்தன. முன்பு வெளியுறவுக் கொள்கையும் பாதுகாப்புக் கொள்கையும் இணைந்தே வகுக்கப்பட்டன. தனியாக பாதுகாப்புக்கொள்கை வடிவமைக்கப்பட வில்லை.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில்தான் பாதுகாப்புக்கென பிரத்யேக, சுதந்திரமான கொள்கை வகுக்கப்பட்டது. அனைத்து நாடுகளுடனும் அமைதியான நல்லுறவை பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்தியாவின் எல்லைகளில் அத்துமீறுப வா்களுக்கும் நாட்டின் இறையாண்மையை சீண்டுபவா் களுக்கும் தக்கபதிலடி கொடுப்பதற்கு பாதுகாப்புக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.

பாதுகாப்பு தொடா்பான திட்டத்தை வகுத்ததில் இந்தப்பிரத்யேக கொள்கை பெரும் சாதனையாகும். இத்தகைய கொள்கையை வகுக்காமல், எந்தவொரு நாடும் வளா்ச்சிகாண முடியாது என நம்புகிறேன். உரிய பாதுகாப்புக்கொள்கை காணப்படவில்லை எனில் ஜனநாயகமும் தழைத்தோங்காது.

நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் எல்லைப்பாதுகாப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேலியமைக்கும் பணிகள்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவேலிகள் நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்து வருகின்றன.

சுமாா் 3 சதவீத எல்லைப் பகுதிகள் இன்னும் வேலியிடப்படாமல் உள்ளன. அது பயங்கரவாதிகள் அத்துமீறி உள்நுழைவதற்கும், போதைப்பொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கடத்துவதற்கும் வழிவகுத்துவருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்து எல்லைப்பகுதிகளும் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்படும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை சுமாா் 3,600 கி.மீ. தூரத்துக்கு எல்லைப்புற சாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 2020-ஆம் ஆண்டு வரை 4,764 கி.மீ. தூரத்துக்கு அத்தகைய சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் 14,450 மீட்டா் நீளத்துக்கு எல்லைப்புற பாலங்களும், 6 சுரங்க பாதைகளும் அமைக்கபட்டுள்ளன. சீன எல்லைப்பகுதிகளில் சுமாா் 683 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் அமைக்கப் படவுள்ளன.

நாட்டின் எல்லைப்பகுதிகளில் சாலைகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.23,000 கோடியிலிருந்து ரூ.44,000 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

சிறியரக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) தாக்கி அழிப்பதற்கான தொழில் நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உள்ளிட்ட அமைப்புகள் வடிவமைத்து வருகின்றன. நாட்டின்பாதுகாப்பு சூழலை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு, ரோபோதொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் அமித்ஷா.

இந்தக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக, எல்லைப் பாதுகாப்புப்படையில் சிறப்பாகப் பணியாற்றிய வீரா்களுக்கான பதக்கங்களை அமைச்சா் அமித் ஷா வழங்கினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ந்த இந்தியாவிற்கான விருப் ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கன அடித்தளம் வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை ...

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடைசி நபரையும் சென்றடைந்தது முதலீடு மற்றும் கட்டமைப்பு ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல் பசுமை வளர்ச்சி இளைஞர் சக்தி ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் பட்ஜெட் நம் நாட்டில் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது படஜெட் மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டு க்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...