நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டம் துவக்கம்

நாடுமுழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும்திட்டத்தை பிரதமர் மோடி துவக்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டைஎண் உருவாக்கப்பட்டு அட்டைதரப்படும்.

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை தேசியசுகாதார ஆணையகம் கொண்டாடும் வேளையில், நாடுதழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி காணொலிவாயிலாக துவக்கி வைத்தார். நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண்வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டைதரப்படும்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று மிகமுக்கியமான நாள். இத்திட்டம் கடந்த 7 ஆண்டுகளில் நாட்டின் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் புதியகட்டத்திற்குள் நுழைகிறது. இது சாதாரணமானது அல்ல. இந்தியாவின் சுகாதாரவசதிகளில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி கொண்டதிட்டம் துவக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா செயல்படுத்தப்பட்டது. ஆயுஷ்மான் பாரத்டிஜிட்டல் திட்டம் இன்று முதல் நாடுமுழுவதும் துவங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இலவச தடுப்பூசி இயக்கத்தின் மூலம், இந்தியா சுமார் 90 கோடிதடுப்பூசி மருந்துகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்தசாதனைக்கு கோவின் தளமும் முக்கிய பங்காற்றியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தரமக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் பெரும்பங்கு வகிக்கும். நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் விரிவுபடுத்தப்பட்டு வலுவான தொழில்நுட்ப தளத்தால் வழங்கபடுகிறது.

நாட்டின் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும் நான் நன்றிதெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி போடுவதோ அல்லது சிகிச்சை அளிப்பதோ, அவர்களின் முயற்சிகள் தேசத்திற்கு மிகப்பெரிய நிவாரணம்அளித்தது. மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவியது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...