தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த போது இருந்த நிலையில் தான் தற்போதும் சென்னை உள்ளது, சென்னையில் மழை பாதிப்பை தடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரைவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
“ச”ட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சியும், பஞ்சாப்பில் காங்கிரஸ்ஆட்சியும் நடைபெறுகிறது. பஞ்சாப்பில் பலமுனைபோட்டி நிலவுகிறது. இருப்பினும் அங்கு பஜக 149 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது. 5 மாநில தேர்தலிலும் பாஜக வெற்றிபெறும். இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி ஏற்படவில்லை. ஆனால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக தவறாக தகவல் பரப்பப் படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னைமேயராக இருந்துள்ளார். அப்போதும் சென்னை மழையால் கடும்பாதிப்பை சந்தித்தது. தற்போது அவர் முதல்வராக உள்ளார். இருந்தபோதிலும் அவர் மேயராக இருந்தபோது இருந்த நிலையில்தான் சென்னை உள்ளது. பருவமழையின்போது சென்னை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை சரிசெய்ய முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?
முல்லை பெரியாறு அணையில் எவ்வளவு அக்கறையுடன் பாஜக உள்ளதோ, அதே அக்கறையுடன்தான் காவிரி பிரச்சினையையும் அணுகி வருகிறோம். மேகதாட் அணை கட்டுவதற்கு எதிராகபோராட்டம் நடத்திய பாஜக மட்டுமே.” இவ்வாறு அவர் கூறினார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |