ராகுல் , இந்துவும் இல்லை, இந்துத்துவாவாதியும் இல்லை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “இந்துத்துவாவாதிகள் அதிகாரத்தை மட்டும் விரும்புவார்கள். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து ஆட்சியில்இருக்கிறார்கள். இந்துத்துவ வாதிகளை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்றிவிட்டு உண்மையின் பாதையில் நடக்கும் இந்துக்களை ஆட்சியில் அமரவைக்க வேண்டும்.அதிகாரத்துக்காக எதையும் செய்வார்கள். அதிகாரத்தைத்தேடி அலையும் பாதையைப் பின்பற்றுகிறார்கள், உண்மையைத் தேடும் பாதையில் இல்லை. இந்ததேசம் இந்துக்களுக்கானது, இந்துத்துவா வாதிகளுக்கானது அல்ல” என்கிறார்.

”ராகுல் காந்தி தன்னை இந்து என்றும் இந்துத்துவாவாதி அல்ல என்றும் கூறுகிறார். ஆனால், இந்த தேசம் என்ன சொல்கிறதென்றால், ராகுல்காந்தி, இந்துவும் இல்லை, இந்துத்துவாவாதியும் இல்லை, இந்துஸ் தானியும் இல்லை என்கிறது. இதற்குக்காரணம் காந்தி குடும்பத்தினர் இந்துக்களையும், இந்துத்துவாவையும் தீவிரவாத அமைப்புகளான போக்கோஹராம், ஐஎஸ் ஆகியவற்றோடு ஒப்பிட்டு சதிசெய்து அவமானப் படுத்துகிறார்கள்.

அதிகார ஆசையுடன் யார் இருக்கிறார்கள் என்பது இந்ததேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும், சிறிய குழந்தைக்கும்கூட தெரியும். அது காந்தி குடும்பத்தினர்தான். உங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டநேரத்தில் கடந்த 1984-ம் ஆண்டு பெரிய கலவரத்தைத் தூண்டிவிட்டீர்கள். ஊழல்செய்தீர்கள், துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீர்கள். பாலகோட் துல்லியத் தாக்குதலில் மரங்கள் மட்டும்தான் விழுந்தன எனப் பேசினீர்கள்.

இந்துத்துவா என்றால் சீக்கியர்களையும், முஸ்லிம்களையும் கொல்வது என்று ராகுல் காந்தி முன்பு பேசினார். இந்து மதத்தைப் பற்றிய ராகுல் காந்தியின் குடும்பத்தின் மனநிலை இதிலிருந்து தெளிவாகிறது. அடுத்து வரும் தேர்தலை மனதில் வைத்துதான் இந்த வெறுப்புகள் வெளிவருகின்றன.

இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக இந்துக்கள் காங்கிரஸுக்குப் பாடம் புகட்டுவார்கள். அப்போது ராகுல் காந்திக்கு இந்து மதம் என்பது தியாகம் என நம்புவார். இருப்பினும், காந்தி குடும்பத்தினர் இதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் ஒற்றுமையை ராகுல்காந்தி விரும்புவார் என நான் நினைக்கவில்லை. எப்போதும் தனதுபேச்சுகள் மூலம் விஷத்தைப் பாய்ச்சுகிறார் ராகுல் காந்தி. பிரதமர் மோடியின் தலைமையில் இந்ததேசம் வளர்வதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதுதான் முசாபர் நகர் வன்முறை நடந்தது. அப்போது உ.பி.யில் சமாஜ்வாதி ஆட்சியில் இருந்தது. இந்தவிஷம் தடவிய வார்த்தைகள் எல்லாம் எதிர் வரும் தேர்தலை மனதில் வைத்துப் பேசப்பட்டன. குறிப்பாக உத்தர பிரதேசத் தேர்தலை மனதில் வைத்துப் பேசப்பட்டவை. இந்துமதத்தைத் தவிர வேறு எந்தமதத்தைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்குத் துணிச்சல் இருக்கிறதா?

உ.பி. மண்ணில் இதுபோன்று ஆத்திர மூட்டும் பேச்சுகளைப் பேச ராகுல் காந்திக்குத் துணிச்சல் இருக்கிறதா? முதல்வர் யோகியின் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என ராகுல்காந்திக்குத் தெரியும். அதனால்தான் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் சென்று ராகுல் பேசினார்.

ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல்விலை உயர்வாக இருப்பது குறித்து ராகுல்காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஏன் பேசவில்லை. மின்சாரக் கட்டணம் உயர்வாக இருப்பது குறித்து ஏன் பேசவில்லை? ராகுல் காந்தி நாதுராம்கோட்சேவின் இரட்டைச் சகோதரர் போலத் தெரிகிறார்.

பாபுராம் சவுரேஸியா கோட்சேவின் தீவிரமான ஆதரவாளராக இருந்து, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர். ஏன் பாபுராம் பற்றி ஒருவார்த்தை கூட ராகுல் காந்தி பேசவில்லை, அவரை ஏன் கட்சியைவிட்டு நீக்கவில்லை. ராகுல் காந்தி கோட்சே பற்றிப் பேசுவார். ஏனென்றால் வெறுப்பைப் பரப்ப வேண்டுமே. பிரதமர் மோடி, பாஜக இரண்டுமே காந்தியின் வழிகளைப் பின்பற்றுகிறார்கள்”.

நன்றி கவுரவ் பாட்டியா
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...