பஞ்சாயத்துகளே நாட்டின் முதுகெலும்பு

இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் திட்டம் அமைக்கப்பட்ட நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி காஷ்மீர் சென்றார். புதிய சுரங்கப்பாதை துவக்கம், 500 கிலோவாட் சோலார் எரி சக்தி திட்டம் துவக்கம், இ சாலை துவக்கம், புதியஅணை நீர்ப்பாசன திட்டம் , ஹை ட்ரோ எலக்ட்ரிக்திட்டம் , டில்லி அமிர்தசரஸ் கத்ரா சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கம் என ரூ.20 ஆயிரம்கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கிவைத்தார்.

தொடர்ந்து, காஷ்மீர் சம்பாமாவட்டம் பாலியில் நடந்த கிராம சபை கூட்ட விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்றைய திட்டத்தின்மூலம் காஷ்மீர் வளர்ச்சி பெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த பாலிகிராம பஞ்சாயத்து கார்பன் இல்லாத பஞ்சாயத்தாக நாட்டிலேயே விளங்குகிறது. இந்த நாட்டிற்கே காஷ்மீர் முன்மாதிரியாக விளங்க துவங்கிஉள்ளது. புதிய சட்டங்கள் மூலம் அனைவருக்கும் அதிகாரம் என்ற நிலையை உருவாக்கி உள்ளேன். ஏழைகள், பெண்கள், தலித்துகள் பயன்பெற்றுள்ளனர். அம்பேத்கரின் கனவுகள் நிறைவேற்றப் படுகின்றன.

அனைத்து நிர்வாகத்திலும் பெண்கள் இடம்பெறவேண்டும் . பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவோம். பஞ்சாயத்துகளே நாட்டின் முதுகெலும்பு. கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீரில் தனியாரின் 17 ஆயிரம்கோடி மட்டுமே முதலீடாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் 32 ஆயிரம்கோடியாக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் புதியவரலாறு படைத்துள்ளோம். காஷ்மீரில் புதியஅத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. புதியதிட்டங்கள் மூலம் மின்சார உற்பத்திபெருகி உள்ளது. ஜனநாயகம், வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக காஷ்மீர் விளங்குகிறது. புதியகாஷ்மீரை உருவாக்குவோம். கல்வி, வேலை வாய்ப்பு ,சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்டவைக்கே முக்கியத்துவம் வழங்குவோம்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...