நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ரயில் சேவையைப் பெற உள்ளது.
ஏப்ரல் 19 ஆம் தேதி கத்ராவிலிருந்து ஸ்ரீநகருக்கு செல்லும் முதல் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தொடக்க ரயில் ஒரு சிறப்பு வந்தே பாரத் ரயிலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தையும் பார்வையிடுவார் என்றும், அதே நாளில் கத்ராவில் ஒரு பொதுப் பேரணியில் உரையாற்றுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் விரைவில் ரயில் சேவை
பிரதமர் மோடியுடன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பிற உயர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
ஆரம்பத்தில், இந்த ரயில் கத்ரா மற்றும் ஸ்ரீநகர்/பாரமுல்லா இடையே இயக்கப்படும். ஜம்மு ரயில் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து, ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர்/பாரமுல்லா வரை ரயில் இயக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு நேரடி ரயில் சேவை தற்போது இருக்காது
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |