தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வில்லை என்று கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையிலும் மற்றும் அணைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்தில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு மானியம்குறைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல் பூரண மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொடரும் லாக்அப் மரணங்களை கண்டித்தும் இந்தபோராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சென்னையில் நடைபெற்றுவரும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைந்தது.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |