திமுகவை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்போராட்டம் – அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து ஜன.3-ல் மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழக பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.

வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த டிச.27-ம் தேதி தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார்.

தொடர்ந்து தற்போது தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதிப் பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழக எதிர்க்கட்சிகள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

நேற்று (டிச.30) அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த ‘சார்’ யார்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பருவமழை ஃபெஞ்சல் புயல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மாநில அரசு கோரும் நிவாரணத் தொகையை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம், தவெக தலைவர் நடிகர் விஜய் மனு வழங்கினார். அண்ணா பல்கலை சம்பவத்துக்கு கண்டன அறிக்கை வெளியிட்டதோடு விஜய் நேற்று தன் கைப்பட ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அதில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அண்ணனாக, அரணாக இருப்பேன் எனக் கூறியிருந்தார்.

தொடர்ந்து, இன்று (டிச.31) நாம் தமிழர் கட்சியினர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நுங்கம்பாக்கம் போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில், தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அப்போது, “ஜனநாயக ரீதியில் போராட வந்த தன்னை காவல்துறை ஒடுக்குகிறது” என்று சீமான் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து ஜன.3-ல் மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...