8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

2024 மார்ச் வரை உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம்  14 துறைகளில்  755 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு  ரூ.1.23 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த  அமைச்சர், இதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

செல்பேசி தயாரிப்பு, மருந்துப் பொருட்கள் உற்பத்தி, மருத்துவ சாதனங்கள் உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், உதிரிபாகங்கள் உற்பத்தி,  தொலைதொடர்பு சாதனங்கள், குளிர்சாதன பெட்டிகள், எல்இடி பல்புகள், உணவுப்பொருட்கள், ஜவுளி, சூரிய மின்சக்திக்கான தகடுகள், வேதியியல் மின்கலங்கள், ட்ரோன்கள் போன்ற துறைகளில் இந்த முதலீடு ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

முக்கியத் துறைகளிலும், அதிநவீன தொழில்நுட்பத்திலும் முதலீடுகளை ஈர்ப்பது, உற்பத்தித் துறையில் செயல் திறனை உறுதி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இந்திய நிறுவனங்களையும், உற்பத்தியாளர்களையும் உலக அளவில் போட்டியிட செய்வது போன்றவை உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் நோக்கங்களாகும் என்று அமைச்சர்  தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...