ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு அளித்து, அவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற அனுமதிக்கும் அமைப்பை உருவாக்க அரசு செயல்பட்டுவருகிறது” என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

‘ரோஜ்கர் மேளா’ விழாமூலம் அரசு வேலைக்கு புதிதாக தேர்வாகியுள்ள 51,000 பேருக்கு பிரதமர் செவ்வாய்க்கிழமை காணொலிவாயிலாக பணி நியமன ஆணையை வழங்கிய பின்பு பேசிய பிரதமர் மோடி பேசியது: “புதிய தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் செமிகன்டெக்டர் போன்ற புதிய துறைகளின் இருப்பை அதிகரிக்க இந்தஅரசு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதன்மூலம், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

முந்தைய அரசிடம் கொள்கை மற்றும் நோக்கம் இல்லாததால் புதிய தொழில் நுட்பங்களில் உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த போது இந்தியா பின்தங்கி இருந்தது. பழைய வழக்கொழிந்த தொழில் நுட்பங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு பயன் படுத்தப்பட்டன. நவீன தொழில்நுட்பங்கள் நாட்டில் வளரமுடியாது என்று நம்பும் மனநிலையும் இருந்தது. இந்த எண்ணம் எங்களுக்கு பலவகையில் தீங்கு இழைத்தது. நவீன உலகில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்கள் நாட்டில் இல்லையென்றால், வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் கடினம்.

முந்தைய அரசின் இந்தப்பழைய மனநிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான பணியினை நாங்கள் தொடங்கினோம். அதிகப் படியான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே எனது அரசின் உறுதிப்பாடு. தண்ணீர் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கப் படுகின்றன. பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் திறக்கப்படுகின்றன. வளர்ச்சிப்பணிகள் வசதிகளை மட்டும் கொண்டு வருவதில்லை. அவை வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.

அயோத்தியில் தனது இருப்பிடத்தில் ராமர் சிலை நிறுவப்பட்டபின்பு வரும் இந்த முதல் தீபாவளி மிகவும் சிறப்புவாய்ந்தது. இந்த தருணத்துக்காக பல தலைமுறையாக காத்திருந்தனர். பிஎல்ஐ (Production-linked Incentives) திட்டம் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும். சாதனை மிக்க வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மிகப்பெரிய அளவிலான முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனது அரசின் கண்காணிப்பின்கீழ் 1.5 லட்சம் ஸ்டார்ட் அப்-கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதேநேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் ஒருகோடி இளைஞர்கள் பயனடைய இருக்கிறார்கள். நாட்டிள்ள இளைஞர்களுக்கு குடியேற்றம் மற்றும் வேலை வாய்ப்பு வசதிகளை எளிமையாக்க இந்திய 21 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது” என்று பிரதமர் பேசினார்.

மேலும், உலகளவில் முன்னுதாரணமாக திகழும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, அவர்கள் ஆட்சியாளர்கள் இல்லை, மக்களுக்கான சேவகர்கள் என்று வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...