தேர்தலை மையப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தாதீர்கள்

தேர்தலை மனதில்வைத்து செயல்பட வேண்டாம் என்று பாஜக மேயர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

குஜராத்தில் உள்ள பாஜக மேயர்கள் மற்றும் துணை மேயர்களுக்கான மாநாட்டில் காணொளி வாயிலாக பங்கேற்று பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்தினார். அதன் விவரம்: “பொருளாதார செயல் பாடுகளுக்கான மையங்களாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாநகரங்கள் மாற்றம் பெற்றுவருகின்றன. எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாநகரங்களுக்கான திட்டமிடல்கள் தற்போதே தொடங்கப்படவேண்டும். நமது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இங்கு தான் தொடங்கப்படுகின்றன.

மாநகரங்களில் தொழில்வளர்ச்சி ஏற்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் தொழிற் பூங்காக்களை மேம்படுத்தப்பட வேண்டும். சிறியளவில் வணிகம் செய்பவர்களும் ஆன்லைன் முறையில் பணபரிவர்த்தனை மேற்கொள்வதை மேயர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்குத்தேவையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

நகர்ப்புற வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதிஒதுக்கீடு செய்துவருகிறது. 2014 வரை 250 கிலோ மீட்டர் அளவுக்கே மெட்ரோ ரயில்களுக்கான கட்டமைப்புகள் இருந்தன. அது தற்போது 775 கிலோ மீட்டராக உயர்த்தப் பட்டுள்ளது. புதிதாக ஆயிரம் கிலோ மீட்டர் பாதை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரங்கள் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக முழுமையான வாழ்க்கைமுறையை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக மாநகரங்களில் வளர்ச்சிபணிகளை பாஜக சிறப்பாக மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. எனவே, பொறுப்பைஉணர்ந்து மேயர்கள் பணியாற்ற வேண்டும். பாஜகவுக்கு இருக்கும் நற்பெயரை தக்கவைத்துக் கொள்வதோடு, அதனை மேலும் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலை மனதில்வைத்து மக்கள் பிரதிநிதிகள் செயல்படக் கூடாது. தேர்தலை மையப்படுத்தி செயல்படும் போது மாநகரங்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது. தேர்தல்குறித்த அச்சம் காரணமாகவே பல நேரங்களில் சரியான முடிவை எடுக்க முடியாமல் போய்விடும். எனவே, தேர்தலை மையப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தாதீர்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.