தீண்டாமைக்கு எதிராக போராடியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டினார்.
குஜாரத்தின் மோர்பி மாவட்டம், தன்காராவில் கடந்த 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம்தேதி சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்தார். ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த அவர் சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவரதுகாலத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து தீவிரமாகப் போராடினார். சமூக சீர்திருத்தங்கள், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரது 200-வது பிறந்த தின விழா டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது.
சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஆண்டு பிறந்தவிழா அடுத்த 2 ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும். அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா அடிமைத் தனத்தில் இருந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் லட்சியங்கள், கலாச்சாரத்தை பாதுகாக்க அவர் முயற்சி மேற்கொண்டார். வேதங்கள்மீது தவறான விளக்கம் அளிக்கப் பட்டது. அப்போது ஒரு மீட்பராக அவர் உருவெடுத்தார்.
சமூக பாகுபாடு, தீண்டாமை போன்ற அவலங்களுக்கு எதிராக அவர் பிரச்சாரம்செய்தார். குறிப்பாக, தீண்டாமைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். இதை தேசத்தந்தை காந்தியடிகளே பாராட்டினார்.
பெண்களுக்கு எதிரான பாகு பாட்டை சுவாமி தயானந்த சரஸ்வதி மிக கடுமையாக எதிர்த்தார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வி, பெண் சமஉரிமையை வலியுறுத்தி அவர் பிரச்சாரம் செய்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தஅமுத காலத்தில் சுவாமியின் 200-வது பிறந்த ஆண்டு விழாவை கொண்டா டுவது நாட்டுக்கு உத்வேகம் அளிக்கிறது.
‘வேதங்களுக்குத் திரும்புவோம்’ என்று அவர் அழைப்பு விடுத்தார். இதையேற்று அவரது வழியில் மக்கள் நடக்கின்றனர். நவீனத்து வத்தின் பாதையில் செல்லும் அதேவேளையில் மரபுகள், கலாச் சாரத்தையும் இந்திய மக்கள் பாதுகாக்கின்றனர்.
தத்துவம், யோகா, கணிதம், கொள்கை, ராஜதந்திரம், அறிவியல்மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியதுறைகளில் இந்திய ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் நமது நாட்டின் பழமையான பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் சுவாமி தயானந்தசரஸ்வதி பெரும் பங்கு வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சமூக சேவை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அவரது அமைப்பின் அறக்கட்டளை மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியது.
சுவாமி தயானந்த சரஸ்வதி காட்டியவழியில் நாம் நடக்கிறோம். ஒடுக்கப் பட்டோர், ஏழைகள், பிற்படுத்தப் பட்டோரின் நலனில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. மக்களின் வீட்டு வசதி, மருத்துவ சிகிச்சை மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை அமல் செய்யப் பட்டிருக்கிறது.
ஜி20 அமைப்பின் தலைமைபொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இந்தநேரத்தில் பழங்கால ஞானத்தின் அடித்தளத்துடன் நவீன லட்சியங்களை ஊக்குவிக்க ஆர்யசமாஜ் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கவேண்டும். இயற்கை விவசாயம், சிறுதானியங்கள் பயன் பாட்டை ஊக்குவிக்க பிரச்சாரம் செய்ய வேண்டும்.
லோகமான்ய திலகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வீர சாவர்க்கர், லாலா லஜபதிராய், லாலா ஹர்தயாள், சந்திரசேகர் ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில் உட்பட எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தயானந்த சரஸ் வதியிடம் இருந்து உத்வேகம் பெற்றனர்.
இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார். 150 ஆண்டுக்கு முன்பே பெண்கல்வி, பெண் சமஉரிமை குறித்து பிரச்சாரம் செய்தார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |