உண்மை எண்ணங்களுடன் உழைக்கும்போது, ஆத்மார்த்தமான வளர்ச்சி ஏற்படும்

கர்நாடக மாநிலம் பெலகாவி-ல் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பிரதமரின் கிசான்திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகையாக ரூ.16,000 கோடியை அவர் விடுவித்தார். மறுசீரமைக்கப்பட்ட பெலாகாவி-ன் ரயில் நிலையக் கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப் பணித்தார். நீர்வள இயக்கத்தின் கீழ் 6 பல்வேறு கிராமத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பெலாகாவி-ன் மக்களின் ஈடு இணையற்ற அன்பு, ஆசீர்வாதங்கள் போன்றவை மக்கள் நலப்பணிகளை செய்வதற்கு அரசுக்குஉத்வேகம் அளிப்பதாகவும் இது வலிமையான ஆதாரம் என்றும் தெரிவித்தார். பெலாகாவிற்கு வருவது என்பது புனிதயாத்திரைக்கு குறைந்தது அல்ல, காலனியாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த சித்தூரின் ராணிசெல்லம்மா, புரட்சியாளர் க்ரந்திவீர் சங்கொலி ராயண்ணா ஆகியோரின் மண் இது என்பதை சுட்டிக்காட்டினார்.

போராட்டத்திற்கு இன்றளவும் பெயர்போன பெலகாவி இந்தியாவை எப்போதும் நினைவுகூரும் வகையில், பெலகாவின் பங்களிப்பு இருக்கும் என பிரதமர் எடுத்துரைத்தார்.

கர்நாடகாவின் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம்குறித்து குறிப்பிட்ட பிரதமர், பெலகாவி 100 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டார்ட்-அப் தாயகமாக திகழ்ந்தது என்றும் கூறினார். பாபுராவ் புசல்கர் ஏற்படுத்திய தொழிற் சாலை பல்வேறு தொழில்களுக்கு அடிப்படையாக இருந்தது என்றும் தெரிவித்தார். பெலகாவியின் இந்த பங்களிப்பை மேலும் வலுப்படுத்த இரட்டைஇயந்திர அரசு விரும்புவதாகவும் பிரதமர் கூறினார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலம் பெலகாவிக்கு புதியசக்தியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார். போக்குவரத்து மற்றும் தண்ணீர் வசதிகளுக்காக நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பிலான திட்டங்கள் இப்பிராந்தியத்தில் அமைவதற்காக மக்களுக்கு அவர் வாழ்த்துதெரிவித்தார். பெலகாவி மூலம் பிரதமர் கிசான் திட்டத்திலிருந்து சிறப்பு நிதியை நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பெற்றுள்ளதாக கூறினார். ஒரு பொத்தானை அழுத்தியதன் மூலம் ரூ.16,000 கோடி நாட்டின் விவசாயிகளின் வங்கிகணக்குகளில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப் பட்டதாக தெரிவித்தார். இடைத்தரகர்கள் இன்றி பெருமளவிலானத் தொகைபரிமாற்றம் செய்யப் பட்டுள்ளதாகவும், இது உலகில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் கூறினார். காங்கிரஸ் ஆட்சிக்குறித்து ஒப்பிட்டு பேசியவர், ஒரு ரூபாய் பரிமாற்றம் செய்த போது, 15 பைசா மட்டுமே ஏழை மக்களை சென்றடைந்ததாக தெரிவித்தார்.

உண்மையான எண்ணங்களுடன் உழைக்கும்போது, ஆத்மார்த்தமான வளர்ச்சி ஏற்படும் என்றும் அதன் அடிப்படையில் இரட்டைஇயந்திர அரசு கர்நாடக மாநிலம் மற்றும் நாட்டுமக்களின் வளர்ச்சிக்காக அனைவருடனும் இணைந்து உண்மையாக உழைத்துவருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய வேளாண் துறையமைச்சர் நரேந்திர சிங் தோமர், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...