வடமாநிலதவர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம்

தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத் துறை மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில், வட இந்தியத் தொழிலாளர்களின் பெரும் பங்கினை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், வெறுப்புப் பிரச்சாரத்தையும், தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், அனைத்து மக்களையும் வரவேற்று அரவணைத்து அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. வட இந்திய சகோதர சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொது மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர். ஆகவே, தமிழகத்தில் வட இந்திய சகோதர சகோதரிகள் தாக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை, தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்புப் பிரச்சாரம், தற்போது, ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும், அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.

திமுக ஆரம்பித்த காலத்திலிருந்து, தற்போது வரை, ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில், திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் பேசிய ஏளனப் பேச்சுக்கள் எத்தனை?

திமுக எம்பி திரு தயாநிதி மாறன், வட மாநிலத் தொழிலாளர்களை, எங்கள் வீட்டு வேலை செய்பவர்கள், கூர்க்கா வேலை செய்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்றெல்லாம் அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்தி மேடையில் பேசினார். அமைச்சர் திரு பொன்முடி, வட இந்தியர்கள் தமிழகத் தெருக்களில் பானிபூரி விற்பவர்கள் என்றார். அமைச்சர் திரு மூர்த்தி, வட மாநில வணிகர்களை தமிழகத்தில் தொழில் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று வெறுப்புணர்வைத் தூண்டினார்.

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர் திரு திருமாவளவன், “வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது” என்று மிரட்டல் தொனியில் பேசினார். அவர் கட்சியான ஈரோடு கிழக்கு மாவட்ட விசிகவினரும், திமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சித் தலைவர் திரு வேல்முருகன் உள்ளிட்டோரும், “வட மாநிலத் தொழிலாளர்களை வெளியேற்று” என்று போஸ்டர் ஒட்டி போராட்டம் அறிவிக்கிறார்கள்.

வட இந்திய சகோதரர்கள் மேல் இத்தனை வன்மப் பிரச்சாரம் நடந்தும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இவர்களைக் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒரு பொறுப்புள்ள முதலமைச்சராக, ஒரு சாரார் மீது தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில், ரயிலில் ஒரு வட இந்திய சகோதரர் தாக்கப்பட்ட போதும், சமூக வலைத்தளங்களில் அந்தக் காணொளி பரவிய பின்னர், நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்களே அன்றி, அந்த சம்பவத்தைக் கண்டிக்கவோ, மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவோ முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

திமுக இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்து வரும் இது போன்ற வெறுப்புப் பிரச்சாரத்தின் காரணமாக, தற்போது பரவி வரும் போலியான காணொளிகளைக் கூட உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர். வடமாநில சகோதரர்கள் மேல் தொடர்ந்து நடக்கும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தி, இந்த அச்சத்தைக் களைவது திமுகவின் பொறுப்பு.

தமிழக பாஜக சார்பாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர், வடமாநில சகோதரர்களைச் சந்தித்து, இந்த பொய்ப் பிரச்சாரங்களை எடுத்துக் கூறி, அவர்கள் பாதுகாப்புக்கு, தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வருகின்றனர்.

இனிமேலாவது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிக்காரர்கள், வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் மாண்பைக் காப்பார் என்று நம்புகிறேன்

 நன்றி அண்ணாமலை 

பாஜக மாநில தலைவர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கி ...

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் – சிவராஜ் சௌகான் நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் என ஜனாதிபதி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பிரதமர் மோடி ஆலோசனை காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை L -முருகன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்த ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்துழைப்பை வேளாண்மை துறையில் அதிகரிக்க முடிவு இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுக ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள் தொகுப்பு 1 நூல்களை சிவராஜ் சௌகான் வெளியிட்டார் "நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள்" தொகுப்பு 1 (Wings to ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுத ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் -அண்ணாமலை ‛‛திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...