பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் திமுக -வினர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர் – அண்ணாமலை புகார்

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு தி.மு.க,,வினரே காரணம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி ஆளும் தி.மு.க., அரசை விமர்சனம் செய்து வருகிறது. இந்த சூழலில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டிற்கு தி.மு.க.,வினரே காரணம் என்றும், நாளை மதுரையில் இருந்து சென்னை வரை பா.ஜ.,வினர் நீதி கேட்பு பேரணி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு தடுக்கப்படும் என்று கூறுவதும் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி, குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது தி.மு.க., தரப்பு. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கிலும், கைது செய்யப்பட்ட தி.மு.க., நிர்வாகியுடன், கைப்பேசியில் பேசிய நபர் யார் என்ற உண்மையை முழுவதுமாக மறைக்க முயற்சிக்கிறது.

இன்னும் ஒரு படி மேல் சென்று, பாதிக்கப்பட்ட மாணவியை, பொதுவெளியிலும், மாமன்றத்திலும் அவமானப்படுத்தியும், மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசிய விட்டு, இனி யாரும் குற்றவாளிகள் மீது புகார் கொடுக்க அச்சப்படும் அளவிற்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு.

தி.மு.க., அரசின் இந்தப் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில், முழு உண்மையும் வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், நாளை (ஜன.,03) மதுரையில் தொடங்கி, சென்னை வரை நடைபெறவிருக்கும் நீதி கேட்பு பேரணியில் பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.ம� ...

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வத ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி ''பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச அணு சக்தி ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ரா� ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத்துறை ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோ ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோதனை வெற்றி கொத்து கொத்தாக வரும் ட்ரோன் படைகளை தடுத்து அழிக்கும் ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முட� ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கரேகுட்டா மலையில் மூவர்ணக் கொடி ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏ� ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...