” தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைக்கத் தான் இல்லாத ஹிந்தித் திணிப்பை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்து உள்ளார். இதனை மக்கள் ஏற்கவில்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இல்லாத ஹிந்தித் திணிப்பு எனக்கூறி, தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைக்க தான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பெயிண்ட் டப்பாவை ஏந்திய சிலரைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் இன்னும் உணரவில்லை. தனது கட்சியின் பொதுச்செயலாளர் பேச்சை ஸ்டாலின் தவற விட்டுவிட்டது போல் தெரிகிறது. அவர் தான் ஹிந்தியை முன்னிறுத்துகிறார். தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையைத் தான் வலியுறுத்துகிறது. இதன்படி எந்த இந்திய மொழியையும் மூன்றாவது மொழியாக படிக்கலாம்.
மாநிலத்தில் இரண்டு வேறு விதிகள் ஏன்? தனியார் பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழி படிக்க வாய்ப்பு உள்ள போது, அதனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க மறுப்பது ஏன்?இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், இத்துடன் தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் முன்பு கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் துரைமுருகன், ” பார்லிமென்டிற்கு போக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகள் பேசத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்,” எனக்கூறியுள்ளார். அந்த மொழி தெரியாத எம்.பி.,க்கள் படும் பாடு குறித்தும் துரைமுருகன் விளக்கி இருந்தார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |