செங்கோல் என்ன செய்யும்?

கொடுங்கோன்மை’ என்ற சொல்லுக்கு மாற்றாக ‘செங்கோன்மை’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார் திருவள்ளுவர்.இவை இரண்டுமே அதிகாரங்களாக உள்ளது குறளில்..

|| ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ||

என்பதை கொடுங்கோன்மையின் உதாரணமாக காட்டுகிறார் வள்ளுவர். அதாவது, நாட்டைக் காக்கும் தலைவன், முறைப்படி அதை செய்யாவிட்டால், அந்நாட்டில் பசுக்கள் பால்தருவது குறையும்; அந்தணர்கள் வேதத்தையும் தர்ம சாத்திரங்களையும் மறந்து நெறி தவறுவர் என்பதை அலகாக சொல்கிறார்..

இதையே, செங்கோன்மை என்றால் என்னவென்பதற்கு,

|| அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் ||

அதாவது, அந்தணர்கள் ஓதும்வேதத்திற்கும் அதனால் விளையும் அறத்திற்கும் மூலமுதலாய் நிற்பது மன்னவனுடைய செங்கோல் என்கிறார். அறத்தின் வழியில் நடக்கும் அரசனாலே செங்கோல்பெருமையை நிலைநாட்ட முடியும்; அதுவே நல்லாட்சி என்பதே இதன் பொருள்..

உலகம் முழுக்க எல்லா பண்பாட்டிலும் இந்த செங்கோல்முறை கடைபிடிக்கப்பட்டு, தற்போதுவரை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பிற நாடுகளை ஒப்பிடும் போது, பாரதத்தில் அதன் தன்மை வேறுபட்டதாகவும், மகத்துவமிக்கதாகவும், கலாச்சார மேன்மை கொண்டதாகவும் உள்ளது. அதனால்தான் இதை ‘தர்மதண்டம்’ என்று கூட அழைக்கிறோம்..

“மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை..” என்கிறது நறுந்தொகை.

கீதையில் 10வது அத்தியாயமான விபூதி யோகத்தில் 38வது சுலோகத்திலே, “ஆள்பவனிடத்தே செங்கோல் நான்” என்று கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

தர்மபரிபாலனம் செய்து, மாறாத அறத்தை நிலைநாட்டுவதே அரசனுக்குகடமை என்பதை எல்லா சாத்திரங்களும்,இலக்கியமும் போற்றுகிறது.கொடியவர்களை தண்டித்து, மக்களைகாப்பது அரசனின் தலையாயக் கடமை. ஒரு விவசாயி, களையை நீக்கி பயிரைக் காப்பது போன்ற தேவையாகும்.

|| கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட்டதனொடு நேர்..||

இதனாலயே மன்னனிடம் அந்த செங்கோல் வழங்கப்படுகிறது என்கிறார் வள்ளுவர்.

பாரதத்தில் நூற்றாண்டுகளாக நமது நீதி நூல்களும், இலக்கியங்களும் விதந்தோதிய வளையாத செங்கோலை அதன் தெய்வீகநெறி மாறாமல், இந்திய நாடாளுமன்றத்தில் நிறுவுவது மேன்மையே..

இன்றும், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா – சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் நாடாளுமன்றத்தில், பழம்பெருமை மிக்க செங்கோல்கள்,நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சபாநாயகரின் நடுவுநிலைக்கும், ஆட்சியின் அறத்திற்கும் சாட்சியாக அங்கே வைக்கப்பட்டுள்ளன..

இங்கிலாந்தில் நாடாளுமன்ற மேலவை என்பது, ‘பிரபுக்களின் அவை’ (house of lords). அங்கே குருதி வழி உரிமை கோரும் ராஜ குடும்பங்களும்,முன்னாள் உறுப்பினர்களின் வாரிசுகளும், அதை விட முக்கியமாக கிருஸ்தவ தேவாலய பாதிரிமார்களும் வீற்றிருக்கிறார்கள்..

இந்திய தேசத்தை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களுடைய மேலவையை நடத்தும் வழி, இப்படிப்பட்டதுதான் இன்றும்..

ஆனால் ஐரோப்பியர்கள் மதச்சார்பற்றவர்கள், உலகிற்கு நீதி சொல்பவர்கள் என்று, தங்கள் சொந்த அடையாளத்தை இந்தியத் தலைவர்களும் அவர்களின் கருத்தியலும் நம்மை சிதைத்த கொடூரம் சொல்லி மாளாது..

இதன் வீச்சை காங்கிரஸோ அல்லது நேருவோ அன்று உணரவில்லை.அவர்களுக்கு இந்திய பண்பாட்டின் மீதிருந்த கசப்புணர்ச்சியும், ஐரோப்பிய மோகமும் இந்த தேசத்தின் ஆன்மாவை சிதைத்தது.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், அந்தச் செங்கோலே தனதாட்சியை நிலைநாட்ட வருகிறது என்பதை நம்புகிறேன். சிந்து சரஸ்வதி நாகரிகத்தில் தோற்றமளிக்கும் ரிஷப முத்திரை, இன்றும் நந்தியாக இந்தச் செங்கோலின் தலையில் வீற்றிருப்பது, அறுபடாத பல்லாயிரமாண்டு மரபை எடுத்துரைக்கிறது..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...