யார் சங்கி…?

சங்கிகள் என்பவர்கள் எல்லா காலமும் உண்டு, இந்து மதம் எப்பொழுதெல்லாம் ஆபத்தில் சிக்குமோ அப்பொழு தெல்லாம் உருவாகி வருவார்கள். அலெக்ஸாண்டர் படைகளை எதிர்த்த புருஷோத்தமன் முதல், செலுகஸின் படையினை எதிர்த்த‌ சமுத்திர குப்தன் முதல் சங்கி, அவன் வழியில் ஆப்கானிய படைகளை எதிர்த்த எல்லோருமே சங்கி
பவுத்த மதத்தின் பிடியில்இருந்து இந்தியாவினை விடுவித்த ஆதிசங்கரர் ஒரு சங்கி, சமணரை வேரறுத்த நாயன்மார்களும் சங்கி

இலங்கை பவுத்தரை அடக்கி, காலமுள்ள காலம் அளவும் சைவம் நிலைத்திருக்க தஞ்சை கோவிலை கட்டிய ராஜராஜன் சங்கிகள் தலைவன்
நாயக்க அரசின் அடித்தளத்தை இந்து அடிப்படையில் அதை காக்க உருவாக்கிய முனிவர் வித்யாகர் ஒரு சங்கி, மராட்டிய அரசர் சிவாஜியினை உருவாக்கிய ஆசானும் சங்கி

நாயக்க மன்னர்களும் சங்கி, சிவாஜியும் சங்கி 1800களின் பிற்பகுதியில் கிறிஸ்தவ அழிச்சாட்டியத்தை எதிர்த்த சேதுபிள்ளை, ஆறுமுக நாவலர் போன்றோரும் சங்கி, அந்த சைவ சிந்தாந்த கழகத்தாரும் சங்கி, மனோன்மணி சுந்தரம்பிள்ளையும் சங்கி கண்ணதாசனும் சங்கி, ஜெயகாந்தனும் சங்கி, அந்த சோ ராமசாமியும், சங்கிகளில் பிரதான கிருபானந்தவாரியும் சங்கி
இப்பொழுது போலி திராவிட கும்பலையும் அவர்களின் புரட்டையும் எதிர்ப்போரும்,

சினிமாக்காரனின் விஷ வார்த்தைகளுக்கு எதிர்குரல்(முகநூலில்) கொடுப்பவனும் சங்கி  சங்கி என்பது இங்கு கலாச்சாரம், அது காவல் காக்கும் அடியவர்கள் பெயர், இந்த மண்ணுக்கும் பாரம்பரியத்துக்கும் மதத்துக்கும் ஆபத்து வரும்பொழுதெல்லாம் உருவாகிவரும் சக்தியின் பெயர் சங்கி
அது முனிவர்கள், அரசர்கள், வீரர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகவாதிகள்,இக்கால நம்பிக்கையுடையோர், இன்று பொறுக்கமுடியா பொய் பித்தலாட்டங்களை இந்துமதத்துக்கு எதிரான கொடுமைகளை கண்டிப்போர் என்ற பெரும் வரிசையின் பொதுசொல் சங்கி
அந்த சங்கிகள் எக்காலமும் உண்டு, இக்காலத்திலும் உண்டு, எதிர்காலத்திலும் வருவார்கள்.

வீரம் என்றால் வீரம், தர்க்கம் என்றால் தர்க்கம், ஆச்சரியம் என்றால் பதிலுக்கு பேராச்சரியம், பேச்சுஎன்றால் பேச்சு, எழுத்து என்றால் எழுத்து என இந்த மண் எக்காலமும் தனக்கான பாதுகாப்பை ஒவ்வொரு வடிவிலும் செய்து கொண்டே இருந்தது

இன்னும் எக்காலமும் செய்யும். அந்த ஆன்மீகமும் தைரியமும் உண்மையும் சத்தியமும் தாங்கி நிற்கும் உருவின் திருபெயரான இம்மண்ணுக்கும் அதன் தாத்பரிய நம்பிக்கைக்கும் காவலாக‌ உருவான ஞானிகள், அரசர்கள்,‌ அடியார்கள், ஆழ்வார்களின் இன்றைய பெயரான சங்கி என்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளவேண்டும்.

அந்த பெருமையில் உரக்க சொல்ல வேண்டும், நாம் இந்த நாட்டின் பாரம்பரியத்தை காக்கவந்த ஞானமும் தைரியமும் மிக்க , பக்திமிக்க பரம்பரையின் சங்கிகள், அதைகாப்பதை தவிர கடமையும் பொறுப்பும் ஏதுமில்லை..சங்கி என்பது பெருமை, சங்கி என்பதுகடமை, சங்கி என்பது மண்ணின் உரிமை. படித்ததில் பிடித்தது.
இந்த அருமையான தகவலை பதிவு செய்த நண்பர் யாரோ..?அவருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...