ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம்

புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அலகாபாத் அருங்காட்சிய கத்தில் இருந்த இந்த செங்கோல், முக்கூடலில் வழிபாடு நடத்தியபின், டில்லி கொண்டு வரப்பட்டு, மத்திய கலாசாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கபட்டது.

இதையடுத்து, இன்று (மே.,27)ம் தேதி, மத்தியகலாசார அமைச்சகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதினம், பிரதமர்மோடியிடம் செங்கோலை வழங்கினார்.

தொடர்ந்து, மதுரைஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரியசுவாமிகள் ஆகியோரிடம், பிரதமர் மோடி ஆசிபெற்றார்.

மதுரை, தருமபுர ஆதீனங்கள்இருவரும், ஆதினங்களின் நினைவு பரிசை வழங்கி, பிரதமருக்கு ஆசிவழங்கினர்.

பிரதமர் மோடி பேசியதாவது:

உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் என் இல்லத்துக்கு வந்திருப்பது அதிர்ஷ்டம்.சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களை தரிசனம்செய்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நாட்டின் பாரம்பரிய சின்னமான செங்கோல், புதியபாராளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படுவதில், மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த செங்கோல், நாம் கடமையின் பாதையில் நடக்கவேண்டும், பொது மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை, நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

சுதந்திரத்திற்குப் பிறகு புனிதசெங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்தசெங்கோல் ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக வைக்கப்பட்டு இருந்தது.

எங்கள் அரசாங்கம் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து, வெளியே கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...