மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற நாட்டுக்கான புதிய பாராளுமன்ற கட்டிட திட்டம். இது டிசம்பர் 2020 ஆண்டு தொடங்கப்பட்டு வரும் மே 28 இல் திறப்பு விழா காண இருக்கிறது. அதாவது தொடங்கிய இரண்டே வருடத்தில் முடிக்கப் பட்டுள்ளது. ரூ. 970 கோடியில், 65,000 ச.மீ பரப்பளவில் நவீன தொழில்நுட்பத்துடன் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கும் இது தேசத்தின் பெருமையாகும்.

ஆனால் அன்று புதிய பாராளுமன்றம் தேவையற்றது, வீண் செலவு என்று ஆரம்பம் முதலே சர்ச்சைகட்டிய எதிர்க்கட்சிகள். 1927இல் கட்டப்பட்ட பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் ஆயுள் முடிந்துவிட்டது என்ற நிதர்சனத்தையும் உணர மறுத்த எதிர்க்கட்சிகள். இன்று ஒவ்வொன்றையும் நேரடியாக பார்த்து பார்த்து கட்டிய பிரதமர் மோடி அதை திறந்து வைக்க கூடாது, ஜனாதிபதிதான் திறக்கவேண்டும் இதுதான் மரபு, இது ஜனாதிபதியை, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் எனவே நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்று ராகுல் காந்தியின் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சை கட்டுகின்றனர், இதில் திமுக, திரிணாமுல் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளும் அடக்கம்.

அதாவது மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்ற எதிர்க்கட்சிகளின் மனோபாவம் தான் இது. 1975 இல் பாராளுமன்றத்தில் ஒரு புதிய கட்டிடம் இந்திரா காந்தியாலும், 1987இல் பாராளுமன்ற நூலகம் ராஜூவ் காந்தியாழும் திறக்க பட்டது என்பது சரி என்றால்.

தமிழகத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தை ஆளுநரை விடுத்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்ததும், வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கும் சோனியா காந்தி சத்தீஸ்கர் சட்டமன்றத்தை திறந்து வைத்ததும், சமீபத்தில் தெலுங்கானா மாநில சட்டமன்ற புதிய கட்டிடத்தை அம்மாநில ஆளுநர் தமிழிசையை விடுத்து மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் திறந்து வைத்ததும் மரபு என்றால். மோடி என்று வரும்போது மட்டும் எதிரிப்பு தெரிவிப்பது ஏன் .

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசி முடித்த பின்னும் மரபுகளை மீறி தமிழக முதல்வர் பேசியாதும், அவையிலிருந்து ஆளுநர் வெளியேறும் விதமாக நடந்து கொண்டதும், ஆட்சியில் இருப்பவர்கள் அவரை ஒருமையில் பேசியதும் எத்தகைய மரபு.

பாராளுமன்ற துவக்க நிகழ்ச்சிகளை எத்தனை அரசியல் கட்சிகள் வேண்டுமானாலும் புறக்கணித்துவிட்டு செல்லட்டும், குறைகூறி நிற்கட்டும். ஆனால் மூச்சுக்கு மூச்சு தமிழர் நலன் பேசும் திமுக புறக்கணிப்ப்பது அபத்தமான ஒன்று.

ஏனென்றால் 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, சோழர் காலத்தைய பேரரசர்கள் செங்கோல் ஏந்தி நீதி தவறாமல் ஆட்சி செய்த பண்பாட்டை தொடர்ந்திடும் விதமாக, தங்கத்திலான செங்கோல் திருவாடுதுறை அதினத்தால் புனித நீர் தெளித்து நேருவிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது உத்திர பிரதேசத்தில் ஏதோ ஒரு அருங்காட்சியத்தில் உறங்கி கொண்டிருந்தக அந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்பட இருக்கிறது.

செம்மை என்ற தமிழ் சொற்றொடருடன் அலங்கரிக்க இருக்கும் இது தமிழுக்கு, தமிழகத்துக்கு கிடைத்த பெருமையல்லவா?. தமிழின் பெருமையை நிலைநாட்ட ஹிந்தி எழுத்துக்களை தேடி சென்று கருப்பு தாரடிக்கும் திமுக. இந்நேரம் இதை வரவேற்றிருக்க வேண்டாமா?. கருப்பு சிவப்பை விடுத்தது கவி கொடி ஏந்தி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றிருந்தாலும் அது தகும் .

நன்றி தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...