AR ரகுமான் பாதிக்கப்பட்டவர் போல அவருடன் நிற்கிறேன் உட்கார்ந்திருக்கிறேன் எனப் பதிவிடும் பார்த்திபன் முதல் கார்த்திக் வரை செய்வது AR ரகுமான் அவர்களின் மீது அனுதாபம் உருவாக்க முயற்சி. நடந்த பெரிய மோசடியை மூடி மறைக்க முயற்சி. மக்கள் கேள்வி இதோ (பதில் கொடுத்துவிட்டு பின் எங்கே வேண்டுமானாலும் போய் நில்லுங்கள்.)
1)46,000 பார்வையாளர்கள் கூடுவதற்கு 5 மணி நேரத்திற்கும் மேல் செலவிடப்படும் இடத்தில் எவ்வளவு toilet வசதிகளை உருவாக்கப்பட்டது? எனக்குத் தெரிந்து 0.
2)சுமார் 7000 வாகனங்களுக்கு டோக்கன் போட்டு காசு வசூல் செய்யத் திட்டமிட்ட குழு – வாகனங்கள் பார்க் செய்ய Parking space இருந்ததா? இல்லை!
3)வாகனங்கள் வந்து செல்ல IN & EXIT வழித்தடங்கள் உருவாக்கப்பட்டிருந்ததா? இல்லை. ரோடே இல்லாத 12 அடி கூட இல்லாத ஒரு வழியைக் கடந்து OMR இணைத்தனர் – வருவதற்கும் இதே ரகம் தான். இதனால் தான் மொத்தமாக 6 மணி நேரம் அந்த பகுதியே Traffic congestion ஏற்பட்டு OMR பகுதியில் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர். பெரியவர்களோடு அவசரமாக செல்ல வேண்டியவர்களையும் நிறுத்தியது இந்த டிராபிக்.
4)50,000 பேர் இருக்கும் இடத்தில் முதல் உதவி மருத்துவக் குழு ஏற்பாடு இருந்ததா? இல்லை. ஆம்பிலன்ஸ் சேவைகள் எதுவும் இருந்ததா? இல்லை. அரசின் தீயணைப்பு துறை காவலர்கள் இருந்தனரா? இல்லை.. மக்களுக்கு போதிய குடி நீர் வசதி ஏற்படுத்தப்பட்டதா? இல்லை! இது எல்லாம் அரசின் அடிபப்டை வழிகாட்டுதல்கள். அதுவும் செய்யவில்லை!
5)நிகழ்ச்சி நடத்த மக்களை ஒருங்கிணைக்க போதுமான வேலை ஆட்கள் இருந்தனரா? போதுமான ஆட்கள் இல்லை. ஒரு கட்டத்தில் யாரையுமே காணவில்லை. 6 மணிக்குப் பின் டிக்கெட் பரிசோதனைக்குக் கூட ஆள் இல்லை.
இருந்த ஒருகிணைப்பாளர்கள் வந்த டிக்கெட் வாங்கி வந்த மக்களை ஒருமையில் அசிங்கமாக திட்டி அடிக்க பாய்ந்துள்ளனர்.
6)பெண்கள் , சிறுமிகள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர் நெரிசலில். குழந்தைகள் வைத்திருந்த பெற்றோர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து தப்பிக்கப் போராடியுள்ளனர். பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பல சேதம் ஏற்பட்டுள்ளது. எதற்குப் பதில் கிடைத்ததா இல்லை? ஒரு விளக்கமில்லை.. இந்த நிகழ்ச்சி ஒரு மாதம் முன் நடப்பதாக இருந்து மழை என்று கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. அன்றே பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு மக்கள் அவதியுற்றனர்.
7)இவ்வளவு கொடூரமாக நடந்த நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி வாங்கி இருந்தார்களா! ஆம் ஆனால் 25,000 வருவார்கள் என்று அனுமதி. ஆனால் ஆதித்யா ராம் பேலஸ் என்ற அந்த பகுதியில் 7500 பேர் வசதியாக அமர்ந்து பார்க்க மட்டுமே முடியும். அதற்கு எப்படி 25000 அனுமதி கொடுத்தது திமுக அரசு?
8)சரி 25000 பேர் அனுமதி கொடுத்த இடத்திற்கு எப்படி 46,000 பேர் வந்தனர்? 36,000 பேருக்கு டிக்கெட் விற்கப்பட்டதாக அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் அது எப்படிச் சரி? சுமார் 15,000 டிக்கெட் விற்றதே பெரிய முறைகேடு தானே!
9)மக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அங்கே மக்களைக் கலைந்து போக வேலைகளைத் தான் பார்த்தனர். ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டாளாவார்கள் கூட கைது செய்யவில்லை. காரணம் AR ரகுமான் ஆளும் திமுக அரசிடம் உள்ள நெருக்கம். ஆயிரம் ஆயிரம் மக்கள் புகாரை வெளிப்படையாகச் சொல்லியும் மக்களை மடைமாற்றத் தான் காவல்துறை முயன்றது. என்ற குற்றச்சாட்டிற்கு காவல்துறையின் பதில்?
AR ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரும் 100% ஆளும் கட்சி பின்னணியில் ஆதரவு இருப்பதால் இதை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்ற திட்டத்தில் அணுகுவதாகவே தெரிகிறது.
10)AR ரகுமான் இது தெரியவே தெரியாது என்பது போல் பேசிகிறார்கள். rehearsal ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று செய்திருப்பார் தானே! அந்த பகுதியில் ஏற்பாடுகள் முறையாக இருக்கிறதா என்ற அடிப்படை கேள்வி கூடவா கேட்காமல் நேரடியாக மேடைக்கு வந்தார் AR ரகுமான். அந்த பகுதிக்கு முன்பு போகவே இல்லை எங்கிறாரா AR ரகுமான்?
இது முதல் முறை அல்ல முன்பு கோவையில் நடந்த நிகழ்ச்சியும் இதே லட்சணத்தில் தான் நடந்தது. ஆளும் கட்சி ஆதரவு இருப்பதால் அனைத்தையும் சமாளிக்கிறார்கள்.
AR ரகுமான் நானே பலிகடா ஆகிறேன் என்று அனுதாபம் தேட முயற்சிக்கிறார். மக்கள் இவ்வளவு பெரிய வேதனையை ஏற்படுத்தி அனுப்பியதை உணர்ந்தால் கட்டிய பணத்தைத் திருப்பு கொடுக்கவோ அல்லது இன்னொரு நிகழ்ச்சியில் அனுமதி பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்படும் என்று எவ்விதமான தீர்வும் அவர் தேடவில்லை. மாறாக நிகழ்ச்சி கலந்து கொள்ளாத மக்கள் டிக்கெட் மற்றும் புகாரை Email செய்ய சொல்கிறார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. இது ஸ்கேம் செய்வோர் அனைவரும் பயன்படுத்தும் யுக்தி. சட்டத்திலிருந்து தப்பிக்க நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியத் தீர்வு கொடுக்க முயயற்சித்தோம் என்று சொல்வதற்கான ஏற்பாடு. ஏன் என்றால் – வந்து உள்ளே அமர்வதற்கும் நிற்பதற்கும் பார்ப்பதற்கும் வழி இல்லாமல் திரும்பிய மக்கள் தான் பாதி , அதில் உள்ளே வருவதற்கே போதிய வசதி இல்லாமல் 4 மணி நேரம் காத்திருந்து வந்து திரும்பியவர்கள் மீதி – இப்போது உள்ளே வந்தவர்கள் எல்லாம் கலந்து கொண்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டனர். அத்தோடு அவர்கள் அவதியுற்றது தான் மிச்சம்?
அன்பை நேசியுங்கள் வெறுப்பு வேண்டாம் என நடிகர் கார்த்திக் போதனை சொல்கிறார். இது உன் குழந்தைக்கும் உன் தந்தை தாயிக்கும் நடந்த சும்மா இருப்பயா மேன்!
கடைசி கேள்வி :
YMCA , தீவுத்திடல் , நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்றவை 40,000 மக்கள் கூடவும் முடியும். அங்கே போதிய வசதிகளும் உண்டு , மக்கள் வந்து போவதும் எளிது.. ஆனால் அந்த பகுதிகளைத் தேர்வு செய்யாது சென்னை வெளியே 20கிமீ தூரத்தில் பனையூரில் வாகனம் வந்து செல்ல முடியாத பகுதியில் போதிய மக்களை ஒன்றிணைக்க வசதியில்லாத பகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன? அதிக பேராசை பெரிய லாபம் வேண்டும் என்ற கணக்கு!
அதே பேராசையோடு தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் பணத்தைத் திருப்பு கொடுக்காமல் ஏமாற்ற வழி தேடுகிறது இந்த கூட்டம் என்பது தான் அசைக்க முடியாத உண்மை.
இது நிச்சயம் 2023 பெரிய மோசடி.. SCAM 2023.
நன்றி -மாரிதாஸ்
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |