சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ‘இன்டியா’ கூட்டணி கட்சியினர் அழிக்க நினைக்கிறார்கள்” என் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி வியாழக்கிழமை அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அம்மாநிலத்தின் சாகர்மாவட்டத்தில் நடந்த பேரணிக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “சமீபத்தில் அவர்கள் (எதிர்க்கட்சி கூட்டணி) மும்பையில் கூட்டம்நடத்தினர். அங்கு அவர்கள் காமாண்டியா கூட்டணியை எவ்வாறு வழி நடத்துவது மற்றும் அரசியல்வியூகம் குறித்து முடிவெடுத்திருப்பார்கள் என்று நான்நினைத்தேன். அவர்கள் மறைமுக கொள்கை ஒன்றினையும் எடுத்துள்ளனர். இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல்நடத்துவது என்பதே அது. இந்தியர்களின் நம்பிக்கைமீது தாக்குதல் நடத்தி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாட்டை ஒருங் கிணைத்து வந்த எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் மரபுகளை அழிக்கநினைக்கிறார்கள்.
‘காமாண்டியா’ கூட்டணியினர் சனாதனதர்மத்தை அழிக்க நினைக்கிறார்கள். இன்று அவர்கள் வெளிப் படையாக சனாதன தர்மத்தின் மீது குறிவைத்துள்ளார்கள். நாளை நம்மீதும் தாக்குதலைத் தொடங்குவார்கள். நாடுமுழுவதும் உள்ள சனாதானிகள் மற்றும் நாட்டை மிகவும் நேசிக்கும் அனைவரும் அவர்களிடம் மிகுந்த எச்சரிக் கையுடன் இருக்கவேண்டும். இது போன்றவர்களை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நிகழ்ச்சிஒன்றில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, “டெங்கு , மலேரியா போல சனாதனத்தையும் அழிக்கப்பட வேண்டும்” என்று பேசினார். அவரது இந்தப்பேச்சை முன்வைத்து இன்டியா கூட்டணி மீது பாஜக கடும் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |