காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அழைப்பின்பேரில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் பலர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப் பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பாஜக தேசியசெயலர் ஜெ.பி. நட்டா, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், மத்தியப் பிரதேசத்தில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தில்லியில் ஹர்திப் சிங் பூரி, கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த், ஹிமாச்சலில் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் சாலையில் அம்மாநிலமுதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையை சுத்தம் செய்தார்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |