புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி “வந்து ப்ராண ப்ரதிஷ்டை” செய்து விட்டுச் சென்றிருக்கலாம். அரசியலுக்காக செய்கிறார் என்ற அனைத்து விமர்ச்சனங் களையும் தாண்டி இந்த வயதிலும் விரதம்இருந்து இராமனை இணைக்கும் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் வந்து புனித நீராடி தாம் செய்யப்போகும் இந்த செயலுக்காக தான் ஒரு நாட்டின் பிரதமர் என்பதைத் தாண்டி இவ்வளவு மெனக்கெடுகிறார் என்றால் அச்செயலின் “புனிதத்துவத்தை” முழுமையாக உணர்ந்து அதை மதித்து ஒவ்வொரு ராம பக்தர்களின் சார்பாகவே இதைச் செய்கிறார் என்று உணர முடிகிறது. இதைக் காண்கையில் இராஜராஜ சோழன் முதலான நமது பேரரசர்கள் கோவில்களைக்கட்டி இறைவனை பிரதிஷ்டை செய்தபோது எவ்வளவு பக்தியுடன், அற்பணிப்புடன் செய்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

இராமேஸ்வரத்தில் போருக்குப் பின் அன்னை சீதையால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் உள்ளது. ஶ்ரீராமர் சீதையைமீட்க இங்கிருந்து தான் இலங்கை சென்று இராவண வதம் முடிந்த பின் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அயோத்தி திரும்பினார் என்பது நம்பிக்கை. இதுகுறித்து திருநாவுக்கரச பெருமான்பாடியதை நமது பாரத பிரதமரும் அறிந்திருக்கக் கூடுமோ?!

“வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்டரக்கன் கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன்கடற்ப டுத்துத் தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சுரத்தைக் கோரமிக் கார்த வத்தாற் கூடுவார்குறிப்பு ளாரே”

– திருநாவுக்கரசர் தேவாரம்.

பொருள் : கடலின் மீது சேதுபாலம் கட்டி, வீரமிக்க கோரைப் பற்களைக் காட்டிக் கொண்டு வானளவு உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குசென்று அவனை அழித்து, பேராற்றலுடைய திருமால் சிவபெருமானுக்கு கோவில்செய்து வழிபட்ட இராமேஸ்வரத்தை அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைபவர்கள் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர்.

-பா இந்துவன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...