ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன்

மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் தீதி யோஜனா’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 5 ஆண்டுகளில் ஒருலட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன்களை இயக்குவது தொடர்பாக பயிற்சிஅளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

‘நமோ ட்ரோன் தீதி யோஜனா’ திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற வலிமையான பெண்கள்-வளர்ச்சி யடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். அப்போது வேளாண் பணிகளுக்காக மகளிர் சுய உதவி குழுக்களைசேர்ந்த 1,000 பெண்களுக்கு ட்ரோன்களை அவர்வழங்கினார். இந்த ட்ரோன்கள் மூலம் வயல்களில் விதைகளை தூவமுடியும். பூச்சிக்கொல்லி, உரத்தை பயிர்கள்மீது தெளிக்க முடியும்.

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது: மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் நாடுமுழுவதும் ஒருகோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவெடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கபட்டு உள்ளது.பெண்களின் நலனுக்காக தூய்மைஇந்தியா திட்டத்தில் நாடுமுழுவதும் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

செங்கோட்டையில் பெண்களுக்கான நலத் திட்டங்களை நான் அறிவித்தபோது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏளனம்செய்தன. ஆனால் கழிப்பறை, இலவசசமையல் காஸ், வங்கிக்கணக்கு உள்ளிட்ட திட்டங்களால் கோடிக்கணக்கான பெண்கள் கவுரவமாக வாழ்க்கையை நடத்துகின்றனர்.

மகப்பேறுவிடுப்பை 26 வாரங்களாக அதிகரித்துள்ளோம். கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. முத்ரா யோஜ்னா திட்டத்தில் பெண்கள் தொழில் தொடங்க கடன்உதவி வழங்கப்படுகிறது. விண்வெளி, தகவல் தொழில்நுட்பத்தில் இந்திய பெண்கள் சாதனைபடைத்து வருகின்றனர். அதிக பெண் விமானிகளை கொண்டநாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளோம்.

மத்திய அரசின் ‘நமோ ட்ரோன் தீதி யோஜனா’ திட்டத்தில் பெண்கள் இப்போது ட்ரோன்பைலட்டுகளாக உருவெடுத்துள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். ஒவ்வொரு சுயஉதவிக் குழுக்களுக்கும் தலா ரூ.20 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

பிரதமரின் சூரியவீடு மின்சார திட்டத்தின்கீழ் வீடுகளில் சூரியமின் தகடுகளை பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள் அதிகளவில் விண்ணப்பிக்க வேண்டுகிறேன். இதன் மூலம் உங்களது மின்கட்டணம் பூஜ்ஜியமாக மாறும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...