60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்

காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன். 60 ஆண்டுகளில் காங்கிரஸ்கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்துமுடித்தேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அசாமின் நல்பாரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசியவர், “2014-ல் நம்பிக்கையையும், 2019-ல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்தேன். தற்போது அசாம்மண்ணுக்கு 2024-ஆம் ஆண்டு உத்தரவாதத்தை கொண்டு வந்துள்ளேன். இது மோடியின் கேரண்டி.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்துபயனாளிகளுக்கும் இலவச ரேஷன் தொடர்ந்து விநியோகிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகளை அமல்படுத்துவதில் எந்தவித பாரபட்சமும் இல்லை. அதன்பலன்கள் அனைத்து குடிமக்களையும் சென்றடையும்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின்கீழ் 5 லட்சம் ரூபாய்வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்தத்திட்டத்தை செயல்படுத்துவதில் பாரபட்சம் இருக்காது. இன்று நாடுமுழுவதும் மோடியின் உத்தரவாதம் நடைமுறைபடுத்த பட்டுவருகிறது. மோடியின் உத்தரவாதத்துக்கு வடகிழக்கு பகுதிகளே சாட்சி.

காங்கிரஸ் கட்சியால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்சினைகள் மட்டுமே கொடுக்கமுடிந்தது. காங்கிரஸ் பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்யமுடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்” என்றார். அசாமில் உள்ள 14 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவில் முதலீடு செய்வது லா ...

இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின் மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், ...

மேக் இந்த இந்தியா திட்டம் -இந்த ...

மேக் இந்த இந்தியா திட்டம் -இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் பாராட்டு சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ...

உலகின் சாமர்த்தியமான தலைவர்கள ...

உலகின் சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம் உலகில் உள்ள சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ...

பல்லாவரம் கழிவு நீர் சம்பவம் கு ...

பல்லாவரம் கழிவு நீர் சம்பவம் குறித்து அண்ணாமலை கேள்வி பல்லாவரம் உட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி , ...

மத்திய அரசு மீது வெளிநாட்டு நித ...

மத்திய அரசு மீது வெளிநாட்டு நிதியின் கீழ் அவதூறு பரப்புவதாக புகார் மத்தியஅரசு மீது வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அவதூறு ...

ராகுல் காந்தி ஒரு நப்பிக்கை துர ...

ராகுல் காந்தி ஒரு நப்பிக்கை துரோகி – சம்பித் பத்ரா விமர்சனம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை துரோகி என்று பாஜக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...