ஓய்வூதியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் குடும்ப ஓய்வூதியக் குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று  தொடங்கி வைத்தார்.

தேச நிர்மாணப்பணியில் ஓய்வூதியதாரர்கள் சம பங்குதாரர்கள் என்று வர்ணித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். எளிதாக ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் ஓய்வூதியதாரர்களைக்கௌரவிப்பது நமது கடமை என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உணர்திறனுடன் முடிவுகளை எடுத்துள்ளதாக   டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.

60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் கணிசமான எண்ணிக்கையை புறக்கணிக்க முடியாது என்றும், ஓய்வூதியம் சமூக-பொருளாதார தாக்கத்தை உருவாக்குகிறது, இதனால் அவர்கள் கண்ணியத்துடன் வாழ அதிகாரம் அளிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் தமது துறை எடுத்த முயற்சிகளை எடுத்துரைத்தார். CPENGRAMS இணையதளத்தில் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதிய வழக்குகளை உரிய நேரத்தில் தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு முகாம் ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நீடிக்கும். 46 துறைகள் / அமைச்சகங்களின் 1891 குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகள் முகாமிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...