மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் சாறு. பசியைத் தூண்டும். ரத்தச் சோகையை குணமாக்கும். இருமலுக்கு இந்தச் சாறு நிவாரணமளிக்கும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு கோளாறுகளின் போது மாதுளையை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளை புத்திக்கூர்மையை அதிகப்படுத்துகிறது. உடலுக்கு வலுவும், பசியெடுக்க வைக்கும் குணமும் மாதுளைக்கு அதிகமாக உள்ளது. பித்தம், கபம், வாயுவை அறவே குணமாக்கும் அருங்கனி. மாதுளை தாகத்தை அடக்க, எரிச்சல் நீங்க, காய்ச்சல் குணமாக, வாய் நோய்கள், தொண்டைக் கோளாறுகள் நீங்க உதவும்.
உடலில் ரத்தத்தை ஊற வைக்கவும், வலுவுக்கும் பயனாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வயிற்றுக் கடுப்புக்கு நல்ல மருந்து.எளிதில் செரிமானமாகும். காய்ச்சலின்போது அருந்த ஏற்றது.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.