மத்திய தகவல் ஆணையத்தின் உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்கு ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்

மத்திய தகவல் ஆணையத்தின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தலைமை  வகித்தார்.

கூட்டத்தில் பேசிய அவர், தகவல் அறியும் உரிமை மனுக்கள் (ஆர்டிஐ) தொடர்பான மேல்முறையீடுகள் கிட்டத்தட்ட 100 சதவீதம் தீர்க்கப்படுவதாக கூறினார். நிலுவையில் உள்ள மனுக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களின் நிலுவைஅளவு, 2019-20-ம் ஆண்டில் 35718 என்ற அளவில் இருந்தது எனவும், 2021-22-ம் ஆண்டில் அது 29213 என கணிசமாகக் குறைந்தது என்றும் அவர் கூறினார். 2023-24-ம் ஆண்டில் 23087 மேல்முறையீடுகளாகவும், 2024-25-ம் ஆண்டில் 22666 மேல்முறையீடுகளாகவும் அது மேலும் குறைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் ஆணையத்தின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பின் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதிலும், மக்களுக்கு தகவல்களை வழங்குவதை எளிதாக்குவதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அமைச்சர் பாராட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...