சென்னையில் புதிய அதிநவீனக்காவல் படையின் கடல் சார் மீட்பு கட்டிடம் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

சென்னையில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன இந்தியக் கடலோரக் காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையக் கட்டிடத்தைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2024, ஆகஸ்ட் 18 அன்று திறந்து வைத்தார். சென்னைத் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள பிராந்திய கடல் மாசு தடுப்பு மையத்தையும் புதுச்சேரியில் கடலோரக் காவல்படை விமானம்  நிறுத்துமிடத்தையும் அவர் காணொலிக் காட்சி  மூலம் தொடங்கி வைத்தார். வலுவான கடல்சார் பாதகாப்பை உறுதி செய்வதற்கும், அவசரமான காலங்களில் திறமையான பணிகளை வழங்குவதற்கும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் இந்த கட்டிடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்

இந்த அதிநவீன வசதி, கடலில் ஆபத்துக்குள்ளான மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கான மீட்புப் பணிகளின் ஒருங்கணைப்பையும்  செயல்திறனையும் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயிர்களைப் பாதுகாப்பதற்கும், நெருக்கடியான சூழ்நிலைகளில் விரைவான பணியை  உறுதி செய்வதற்கும் அரசின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. இந்த மையம் தரைவழி மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள் மூலம் இடர்ப்பாடுகளைக் கண்காணிப்பதற்கான நவீன உபகரணங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. மேலும், தேடல் மற்றும் மீட்பு நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்தியக் கடலோரக்  காவல்படையின் பயிற்சி பெற்ற பணியாளர்கள், மீட்பு விமானம், கப்பல்கள் மற்றும் பிற வசதிகளுடன்,   நிகழ்நேர எச்சரிக்கை நிர்வாகத்திற்காக மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடலோர நாடுகளை ஒட்டியுள்ள நீரில், கடல் மாசுபாட்டிற்கு எதிரான, குறிப்பாக எண்ணெய் மற்றும் ரசாயன மாசுபாட்டிற்கு எதிரான, நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முதல் வகையான வசதி இதுவாகும். 2022, நவம்பர் 22  அன்று கம்போடியாவில் நடைபெற்ற முதல் இந்தோ-ஆசியான் கூட்டத்தின் போது பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்த மையத்தின் உருவாக்கத்தை முதலில் அறிவித்தார்.

சென்னைத் துறைமுக வளாகத்தில் கிழக்குக் கடலோரக் காவல்படை மண்டலத் தலைமையகத்தால் இந்த மையம் அமைக்கப்பட்டது. இது ஒரு அவசரகால தகவல் மையத்தைக் கொண்டுள்ளது. கடல் எண்ணெய் மாசுபாடு சம்பவங்களைக் கண்காணிக்க 24 மணி நேரமும் கடலோரக் காவல்படை பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். துறைமுகங்கள், எண்ணெய் கையாளும் முகமைகள், அரசு நிறுவனங்கள், தனியார் பங்கேற்பாளர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு மாசு தடுப்பு தொழில்நுட்பங்களில் இது பயிற்சி அளிக்கும். கடலில் எண்ணெய் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதில் நட்பு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் இது பயிற்சி அளிக்கும்.

கடலோர காவல்படையின் விமானங்கள் நிறுத்துமிடம்

இந்த வசதி இந்தியக் கடலோரக் காவல்படையின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என்பதுடன், புதுச்சேரியலும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் கடல்சார் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும். விமானங்கள் நிறுத்துமிடத்தில் சேத்தக் மற்றும் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் படையணிகள் இருக்கும்  இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இவை கடல் ரோந்து, தேடுதல், மீட்பு மற்றும் இதுபோன்ற பிற பணிகளை நிலத்திலிருந்தும், கடலில் ரோந்து செல்லும் கடலோரக் காவல்படை கப்பல்களிலிருந்தும் மேற்கொள்ளும் திறன் கொண்டவை.

பாதுகாப்பு அமைச்சகம், இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் பிரமுகர்கள், நட்பு நாடுகளின் விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...