எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு

நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் இன்றே உறுதி ஏற்க வேண்டும் என்று குடியரசுத்துணைத் தலைவர்ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார். நாம் ஒருவரை எழுத்தறிவுள்ளவராக மாற்றும்போது, அவரைஅறியாமையில் இருந்து விடுவித்து அவரை கண்ணியமாக உணர வைக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (08.09.2024) நடைபெற்ற சர்வதேசஎழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, சிறுமியோஎன யாராக இருந்தாலும் ஒருவருக்கு கல்வி அளிப்பதன் மூலம் நாம் பெறும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது என்றார்.

கல்வி என்பது எந்த வகையிலும் ஒருவரிடம் இருந்து பறிக்கமுடியாத ஒன்று என அவர் தெரிவித்தார். அதை பகிர்ந்து கொண்டேஇருக்கும் வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். எழுத்தறிவை ஆர்வத்துடன்அதிகரித்தால், நாளந்தா, தக்ஷசீலா போன்ற கற்றல் மையமாக இந்தியா தனது பழைய நிலையைமீண்டும் அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய தேசியக் கல்விக்கொள்கையை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தஅவர், இந்த கொள்கை தேசத்திற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்றார்.

இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை நமது இளைஞர்கள்தங்கள் திறமையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கிறது எனவும்அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாய்மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜக்தீப் தன்கர், இந்தியாவின் இணையற்ற மொழிவாரி பன்முகத்தன்மை குறித்து விரிவாகப் பேசினார்.  மொழியின்செழுமையைப் பொறுத்தவரை, பல மொழிகளைக்கொண்ட ஒரு தனித்துவமான தேசம் இந்தியா என்று அவர் குறிப்பிட்டார்.

ஆறு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு நபரையாவது கல்வியறிவு பெறச்செய்ய அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கடந்தபத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை எடுத்துரைத்து அதற்கு குடியரசுத் துணைத்தலைவர்ஜக்தீப் தன்கர் பாராட்டுத் தெரிவித்தார்.

முன்னதாக தொடக்க உரையாற்றிய மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, சுகாதார நிலைமையை மேம்படுத்துதல், பெண்களுக்குஅதிகாரமளித்தல், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவற்றில் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். எழுத்தறிவு என்பது வளர்ச்சிக்கான இலக்கு மட்டுமல்ல எனவும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமே இதுதான் என்றும் அவர் கூறினார். புதிய தேசிய கல்விக் கொள்கை-2020 மொழியியல் தடைகளை அகற்றுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஒவ்வொருவரையும் எழுத்தறிவு பெற்றவராக மாற்றுவதற்கான நமது முயற்சிகள் உலகளாவிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.

பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார் தமது வரவேற்புரையில், எழுத்தறிவுத் திட்டம் எவ்வாறு 100% எழுத்தறிவை அடைவதை நோக்கமாகக் கொண்டது என்பதையும் புதிய தேசியக் கல்விக் கொள்கையுடன் அது எவ்வாறு இணைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டார். லடாக் யூனியன் பிரதேசம் முழு எழுத்தறிவை (97% க்கும் அதிகம்) அடைந்ததற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில ...

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்- அமித்ஷா உறுதி 'வரும் 2026ம் ஆண்டுக்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முத ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முதலில் இந்தியா தான் -முகமது முயிசு மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் ச ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் பிரதமர் மோடி -அமித்ஷா பெருமிதம் '23 ஆண்டுகால பொது வாழ்வை பிரதமர் மோடி நிறைவு ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதம ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, கடவுள் துர்க்கைக்கு அர்ப்பணிக்கும் ...

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகம ...

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகமது முயிசு கருத்து  'எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர்கள் என ...

பிரதமர் மோடியின் நவராத்திரி வி ...

பிரதமர் மோடியின் நவராத்திரி விரதம் பிரதமர் நரேந்திர மோடி தனது சிறுவயது முதலே நவராத்திரி ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...