“பார்லிமென்ட் நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கினால், உங்களை தேர்ந்தெடுத்து எதற்காக மக்கள் அனுப்பினர் என்பதை சிந்திக்கும் ”நிர்பந்தம் ஏற்படும்,” என, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்தீப் தன்கர், முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங் பெயரிலான விருதுகளை வழங்கினார்.
பார்லிமென்டில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எம்.பி.,க்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கினால் பார்லிமென்டுக்கு ஏன் அனுப்பப்பட்டோம் என நீங்கள் சிந்திக்க, மக்கள் உங்களை நிர்பந்திக்கும் நிலை ஏற்படும் என்பதை மறக்க வேண்டாம். எந்தவொரு ஜனநாயகமும் வெற்றி பெற வெளிப்படைத் தன்மை மற்றும் உறுதியான பேச்சு இருக்க வேண்டும். மோதிக் கொள்ளும் இருதரப்பும் பெரும் பொறுப்புடன் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |