பார்லிமென்ட் நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் பொது மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறோம்,” என ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அவர் பேசியதாவது: பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடியது ஜனநாயக மாண்புகளை உறுதிப்படுத்தி இருந்தாலும், இந்த அவையில் நமது நடவடிக்கை வேறு விஷயங்களை சொல்கிறது.
இந்த அவை 43 மணி நேரம் 27 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இந்த அப்பட்டமான உண்மை கவலை அளிக்கிறது. எம்.பி.,க்கள் ஆகிய நாம் இந்திய மக்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். இந்த தொடர்ச்சியான இடையூறுகள், நமது ஜனநாயக அமைப்புகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன.சில சட்டங்களை நிறைவேற்றியும், இந்தியா சீனா உறவுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தை கேட்டது என பல சாதனைகள் படைக்கப்பட்டு இருந்தாலும் அது அனைத்தையும் நமது தோல்வி மறைத்துவிட்டது.
நாம் அனைவரும் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். நாட்டின் 140 கோடி மக்கள் நம்மிடம் இருந்து சிறந்ததை எதிர்பார்க்கின்றனர். அர்த்தமுள்ள விவாதம், இடையூறுக்கு இடையேயான நேரத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். நமது ஜனநாயக மரபானது, அரசியல் வேறுபாடுகளை தாண்டி எழுச்சி பெறுவதையும், பார்லிமென்டின் புனிதம் உறுதி செய்யப்படுவதையும் எதிர்பார்க்கிறது.
இந்த அவை தனித்துவமானது. நமது ஜனநாயகத்தை இந்த உலகம் எதிர்பார்த்து கொண்டு உள்ளது. நமது நடத்தை மூலம் நமது மக்களை தோல்வி அடையச் செய்துவிட்டோம். பார்லிமென்ட்டிற்கு இடையூறு என்பது மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கேலி செய்கின்றன. அனுபவமிக்க விவாதம் மேலோங்க வேண்டிய நிலையில் இடையூறு மட்டுமே காண்கிறோம். மக்களின் நன்மைக்காக சேவை செய்ய கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தோம். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |