பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை

ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறி உள்ளார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில பா.ஜ., தலைவர் அண்ணாமலை சென்றிருக்கிறார். படிப்பை முடித்த பின்னர் வரும் டிசம்பர் மாதம் சென்னை திரும்புகிறார். இந்நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள 1,345 மீட்டர் உயரம் கொண்ட பென் நெவிஸ் சிகரம் மீது தேசியக்கொடியுடன் அண்ணாமலை ஏறி உள்ளார். இந்த சாதனையை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் போட்டோவுடன் பதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவில் அண்ணாமலை கூறி இருப்பதாவது; ஸ்காட்லாந்தில் உள்ள பென் நெவிஸ் சிகரம் பிரிட்டனின் உயரமான சிகரம். இந்த சிகரத்தில் ஏற ஒரு வாய்ப்பு கிடைத்தது. சவாலை ஏற்றுக் கொண்டு உச்சியை அடைந்தேன்.

எனது இந்த சாதனையை நான் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். அவரின் தொலைநோக்கு பார்வையான மிஷன் லைப் என்பது ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்ட ஒரு பிரசாரம்.

இந்த பயணம் மிகவும் அறிவூட்டுவதாக இருந்தது. எங்கள் பயணம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது. இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான நீடித்த நட்பின் அடையாளமான பென் நெவிஸ் சிகரத்தில் மூவர்ணக்கொடியுடன் ஏறியதில் பெருமை அடைகிறேன்.

இவ்வாறு தமது பதிவில் அண்ணாமலை கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...