மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி

‘புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என பிரதமர் மோடி பேசினார்.

பஞ்சாப், சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் குடிமக்களின் லட்சியங்களை புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்ற வழி வகுக்கும். முந்தைய சட்டங்களின் நோக்கம் இந்தியர்களை தண்டிப்பதும், அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும் ஆகும்.

துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும், நடைமுறையில் இருந்துள்ளது. குடிமக்களை அடிமைகளாக நினைத்துப் பயன்படுத்தினர். நாம் ஏன் அந்த சட்டங்களைத் பின்பற்ற வேண்டும்.முந்தை ஆட்சியில் இருந்தவர்கள் சட்டத்தை மாற்ற நினைக்கவில்லை. காலனித்துவ மனப்பான்மையில் இருந்து வெளி வர வேண்டும் என நினைத்து, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து தீர்மானம் போட்டேன்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில், நமது நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து சட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டு உள்ளன. இதனை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...